பிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்

பிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்

புரோமோவில் காட்டப்பட்டது போல் மஹத்துக்கும் பாலாஜிக்குமான சண்டை நேற்றைய நிகழ்ச்சியில் வெடித்தது.

வீட்டில் உள்ளவர்கள் மூன்று அணிகளாக பிரிந்து ஆடிய ‘கிருடன்- போலீஸ்’ டாஸ்க் இன்றும் தொடர்ந்தது. மற்ற டாஸ்க்கை போல இல்லாமல் இதில் மோதல்கள் அதிகமாகவே ஏற்பட்டன. உணவு கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

 
உதாரணமாக சென்றாயன் சாப்பிடுவதற்கு உணவு எடுக்க முயன்ற போது ஷாரிக் வந்து தடுத்தார். கோபமடைந்த சென்றாயன் நான் விளையாடவில்லை என்று கோபித்துக் கொண்டார்.

திருடர்களான டேனி, யாஷிகா ஐஸ்வர்யா மூவரும் திருடி வந்த ஆப்பிளை விதிமுறைப்படி பொதுமக்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாத மஹத் பசியில் ஒரு ஆப்பிளை கடித்து சாப்பிட்டு விட்டார். அருகில் இருந்த டேனியலும் தன் பங்குக்கு ”ஐயா வாழ்க” என்று ஏற்றி விட, கோபத்தில் பாலாஜி “இதுக்கு பிச்சையெடுத்து சாப்பிடலாம்” என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டார்.

 
இதன் பிறகுதான் மஹத்துக்கும் பாலாஜிக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அடித்துக் கொள்ளாத குறைதான். அந்த அளவுக்கு கெட்டவார்த்தைகளும், ஏக வசனங்களும் மாறி மாறி பறந்தன.

”போடா காமெடி.. ஜோக்கரு” என்று மஹத் திட்டியது பாலாஜியை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அறையில் சென்று அமர்ந்து அழுது கொண்டிருந்தார். வழக்கம் போல யோசிக்காம வார்த்தையை விட்டு பிறகு வருந்தும் மஹத் இந்த முறை பாலாஜியிடம் சென்று மன்னிப்பு கேட்டார். “உன் காலுல வேணாலும் விழுறேன், மன்னிச்சிடுண்ணே” என்று பாலாஜியின் கால்களை பற்றிக் கொண்டார்.


https://goo.gl/F4EGcb


18 Feb 2019

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

06 Feb 2019

பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்