'பிக் பாஸ்' ஜூலி கதாநாயகியாக நடிக்கும் 'உத்தமி'

'பிக் பாஸ்' ஜூலி கதாநாயகியாக நடிக்கும் 'உத்தமி'
ஜல்லிக்கட்டு போராட்டம், 'பிக்பாஸ்' மூலம் கவனம் ஈர்த்த ஜூலி தமிழ் சினிமாவில் ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இப்படத்துக்கு 'உத்தமி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பியதில் கவனம் பெற்றார்.

தற்போது பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கும் ஜூலி புதிய தமிழ்ப் படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இப்படத்தை K7 புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. 'ஜூலியும் 4 பேரும்', 'தப்பாட்டம்' போன்ற படங்களில் நடித்த துரை சுதாகர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படம் குறித்து ஜூலி கூறுகையில், ''கதையைக் கேட்டதும் எனக்குப் பிடித்துவிட்டது. இந்தப் படம் என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்" என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில் படத்துக்கு 'உத்தமி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் ஜூலி சமூக சேவகராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
https://goo.gl/6saFVg


13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்

11 Dec 2018

ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

11 Dec 2018

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம்; மக்கள் தீர்ப்பு இது: கமல்ஹாசன்

10 Dec 2018

சாதி வெறியர்களின் முகத்தில் கரியைப் பூசிய கவுசல்யாவுக்கு வாழ்த்துகள்: நடிகர் சத்யராஜ்

01 Nov 2018

2.0 - ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்

01 Nov 2018

மலையாள இயக்குனர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் பாலியல் புகார்

31 Oct 2018

செருப்பால் தாக்கி சண்டையிட்ட பிரபல நடிகரின் 2 மனைவிகள்

25 Oct 2018

மீடூ புகார்: மார்கழிக் கச்சேரியிலிருந்து நீக்கப்பட்ட இசைக்கலைஞர்கள்

25 Oct 2018

தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் வழக்கு