பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு: திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கருப்புக்கொடி ஏற்றம்

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு: திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் கருப்புக்கொடி ஏற்றம்
பிரதமர் நரேந்திர மோடி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுவதற்காக தமிழகம் வருகிறார்.

இந்த கண்காட்சி நேற்று தொடங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்று தொடங்கினாலும், அதன் தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.

இதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வருகிறார்.

டெல்லியில் இருந்து இன்று காலை 6.40 மணி அளவில் தனி விமானத்தில் புறப்படும் அவர், காலை 9.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் செல்கிறார்.  அதன்பின் அங்கிருந்து காரில் கண்காட்சி நடைபெறும் திருவிடந்தைக்கு செல்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்ட வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் நாளை துக்க நாளாக கடைபிடிக்கும் வகையில், 12-ம் தேதியன்று எல்லோருடைய வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டுமென்றும், அனைவரும் கருப்பு உடையணிய வேண்டும் என்றும், கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்காக தி.மு.க.வின் தலைமையகம் அமைந்திருக்கும் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் இன்று கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

https://goo.gl/8rsE6i






18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்