பிரதமர் வரும்போது கருப்பு கொடியுடன் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்- பாரதிராஜா

பிரதமர் வரும்போது கருப்பு கொடியுடன் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம்- பாரதிராஜா
நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம். கருப்பு கொடியுடன் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம் என பாரதிராஜா தெரிவித்தனர்.


தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் திரைப்பட இயக்குநர்கள்  பாரதிராஜா, சீமான்,  கவுதமன், அமீர், மற்றும்   கருணாஸ்,   தமிமூன் அன்சாரி, தனியரசு  கூட்டாக பேட்டி அளித்தனர்.

பாரதிராஜா கூறியதாவது :-

சிலர் (ரஜினி) நேற்று நடந்ததை வன்முறை என்கின்றனர். அது வன்முறையல்ல; எதிர்வினை. அதனால் எதிர்வினையை மட்டும் பூதாகரமாக பேசுவது சரியல்ல.


நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம்; ஆனால் எங்கு என்பதை கூற முடியாது. எங்களது எதிர்கால போராட்டங்கள் வேறுவிதமாக இருக்கும்.வரும் 20ம் தேதி ஐபிஎல் நடக்கும்போது போராட்டம் வேறுவிதமாக இருக்கும் .


போராட்டத்தில் என்னை கைது செய்தனர்; அது பற்றி ரஜினி பேசவில்லை. கூடைக்குள் இருப்பது பூ அல்ல; பூ நாகம் என இப்போதுதான் தெரியவந்துள்ளது.


போராட்டத்தின் போது நான் போலீசாரை தாக்கவில்லை, யாரையும் தாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை. ரஜினி வாய் மட்டுமே அசைக்கிறார்; அவருக்கு வேறு யாரோ குரல் கொடுக்கின்றனர்.


கருப்பு கொடியுடன் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
https://goo.gl/fzyrXG






18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்