பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.

‘யங் மங் சங்’, ‘லக்‌ஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ’பொன் மாணிக்கவேல்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இப்படத்தில், காவல்துறை உதவி ஆணையராக நடிக்கிறார்.

தமிழகத்தின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இருவரும் கணவன் - மனைவியாக நடிக்கின்றனர். இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், ‘பாகுபலி’யில் காளகேய ராஜாவாக நடித்த பிரபாகரும் நடிக்கிறார்.

போலீஸ் கதை என்பதால், ஆக்‌ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ‘பொன் மாணிக்கவேல்’ உருவாகி வருகிறது. மொத்தம் 5 சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெறுகின்றன. ஒவ்வொன்றும் தனித்துவமாகத் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.

https://goo.gl/QYCBVA


18 Feb 2019

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

06 Feb 2019

பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்