பிரான்ஸ் அதிபர் மனைவியின் உடலை வர்ணித்த டொனால்ட் டிரம்ப்

பிரான்ஸ் அதிபர் மனைவியின்  உடலை வர்ணித்த டொனால்ட் டிரம்ப்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முன்னிலையில் அவரது மனைவியின் அழகை அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் வர்ணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1789-ம் ஆண்டு நிகழ்ந்த பிரான்ஸ் புரட்சியை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் பங்கேற்கமாறு இம்மானுவேல் மேக்ரான் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப் பாரீஸில் உள்ள அருங்காட்சியம் ஒன்றில் நேற்று பேசியுள்ளார்.

அப்போது, இம்மானுவேல் மேக்ரான் முன்னிலையில் அவரது மனைவியான பிரிஜ்ஜிட் மேக்ரானின் அழகை டொனால்ட் டிரம்ப் வர்ணித்துள்ளார்.

பிரிஜ்ஜிட்டை பார்த்து ‘உங்களது உடல் கவர்ச்சி கட்டமைப்புடன் உள்ளது  ’ எனக் கூறிவிட்டு இம்மானுவேல் மேக்ரானை நோக்கி ‘உங்கள் மனைவி மிகவும் அழகாக இருக்கிறார்’ எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் பேசிய இவ்வார்த்தைகள் கூட்டத்தினர் மத்தியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.

இம்மானுவேல் மேக்ரானை விட அவரது மனைவி 15 வயது மூத்தவராக உள்ளதால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அவரது அழகை டொனால்ட் டிரம்ப் புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேக்ரன் 17 வயதில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது தன்னுடைய ஆசிரியையை மணப்பதாக வாக்களித்த மேக்ரன் அதை போலவே தன்னுடைய பள்ளி ஆசிரியையை மணந்துள்ளார்.

மேக்ரனுக்கு திருமணமான போது பிரிஜ்ஜெட்டுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர் என பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2007-ல் பிரிஜ்ஜெட்டுக்கு விவாகரத்தான பின்னர் தன்னுடைய 29 வயதில் பிரிஜ்ஜெட்டை மணந்துள்ளார் மேக்ரன்.


https://goo.gl/DQdrpP


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே