பிரெஞ்ச் ஓபனில் செரீனா அபார வெற்றி

பிரெஞ்ச் ஓபனில் செரீனா அபார வெற்றி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில், 11 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

நேற்று நடந்த பைனலில், ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை சுலபமாக வீழ்த்தினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் "நம்பர்-1' வீராங்கனையான செரினா, 31, "நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய ரஷ்யாவின் ஷரபோவாவை, 26, (நம்பர்-2) சந்தித்தார்.

துவக்கத்தில் இருந்து அபாரமாக ஆடிய செரினா முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், இரண்டாவது செட்டை 6-4 என தன்வசப்படுத்தினார்.

இரண்டாவது முறை: ஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் வரை நீடித்த பைனலின் முடிவில் செரினா வில்லியம்ஸ் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 11 ஆண்டுகளுக்கு பின், பிரெஞ்ச் ஓபனில் இரண்டாவது முறையாக (2002, 2013) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

முன்னதாக இவர், 2002ல் நடந்த பிரெஞ்ச் ஓபன் பைனலில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி, முதன்முறையாக கோப்பை வென்றார். இது, இவரது 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஏற்கனவே இவர், ஆஸ்திரேலிய ஓபன் 5 (2003, 05, 07, 09, 10), விம்பிள்டன் 5 (2002, 03, 09, 10, 12), யு.எஸ்., ஓபன் 4 (1999, 2002, 08, 12) உள்ளிட்ட கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் கோப்பை வென்றுள்ளார்.

 பைனலில் வெற்றி பெற்ற செரினாவுக்கு கோப்பையுடன் சுமார் ரூ. 11 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பெற்ற ஷரபோவாவுக்கு சுமார் ரூ. 5.7 கோடி பரிசு வழங்கப்பட்டது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கவுள்ள பைனலில் "நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் ரபெல் நடால், சகநாட்டை சேர்ந்த டேவிட் பெரரை எதிர்கொள்கிறார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் பட்சத்தில், பிரெஞ்ச் ஓபனில் எட்டு முறை கோப்பை வென்ற வீரர் என்ற புதிய சாதனை படைக்கலாம்.
https://goo.gl/JGk8mN






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்