பிறந்த மாதமும் அதிர்ஷ்டப் பலன்களும்

பிறந்த மாதமும் அதிர்ஷ்டப் பலன்களும்


சித்திரை:

* இம்மாதத்தில் குழந்தை பிறப்பதைப் பலரும் விரும்புவதில்லை. இம்மாதத்தில் பிறந்தால் குடும்பம் பல அவதிகளுக்குள்ளாகி சீரழிந்துவிடும் என்பர்.

* இம்மாதத்தில் பிறந்தவரின் தந்தையாருக்குப் பெருத்த யோகம் உண்டாகும். அவருடைய வருமானம் பலவகையிலும் பெருகும். பொன்பொருள் சேர்க்கை உண்டாகும்.

* பொதுவாக இவர்கள் நடுத்தர உயரமும், உருண்டு திரண்ட சரீரமும் கொண்டவர்களாக இருப்பர். முகம் நீண்டும் நெற்றி விசாலமுமாக இருக்கும். புருவம் அடர்த்தியாகவும் நீண்ட பற்கள் உள்ளவர்களாகவும் இருப்பர். கம்பீரமான தோற்றம் உடையவர்கள்.

* இவர்கள் பிறர் சொல்வதைக் கேட்டு எதையும் செய்ய மாட்டார்கள். எதையும் தம் யோசனைப்படி புதிய பாணியில் செய்வர். எதையும் பரிபூரணமாக முடிக்கும் முன்னேயே நிறுத்திவிடுவர்.

* இவர்கள் தம் உயிரையும் பணயம் வைத்து மற்றவர்களுக்காகப் போராட சிறிதும் தயங்க மாட்டார்கள். செயல் திறனும் மிக்கவர்கள்.

* இவர்களுக்கு அடிக்கடி ஜலதோஷம், காய்ச்சல் ஏற்படும். தலைவலி மற்றும் மூல சம்பந்தமான தொல்லைகள் உண்டாகும். மேலும் உஷ்ண மிகுதியால் வயிற்றுவலி, மூல நோயும் உண்டாகும்.

* இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்குப் பவளம் பதித்த மோதிரமும், சிவப்பு நிறமும் நன்மை தரவல்லது. இவர்கள் குறிப்பாக தெற்குத் திக்கில் நன்மைகளைப் பெறலாம்.


வைகாசி:

* இம்மாதத்தில் பிறந்தவர் நடுத்தர உயரமும் நீண்ட கழுத்துமுள்ளவராக இருப்பர். அகன்ற மார்பும், விரிந்த தோளும் உடையவர்கள். அழகிய காதும், கவர்ச்சியான பார்வையும் உடையவர். தாடைகள் அகன்றிருக்கும். நெற்றி படர்ந்திருக்கும். இவர்கள் அறிவாளியாகவும், பொறுமைசாலிகளாகவும் இருப்பர்.

* எந்தக் கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளக்கூடியவர்கள். நீண்ட தூரமானாலும் நடக்கச் சலிக்கமாட்டார்கள். இவர்கள் எந்த ஒரு காரியத்தையும் திறம்படச் செய்து முடிப்பர். விடாமுயற்சி உள்ளவர்கள்.

* எதையும் தீர ஆலோசித்து நிதானமாகவே செயலில் ஈடுபடுவர். எப்பொழுதும் எதையாவதொன்றைச் செய்து கொண்டிருப்பர். கொஞ்ச நேரம் கூட ஓய்வாக இருக்க மாட்டார்கள்.

* இவர்கள் காரியவாதிகள். ஆனால் தமக்கென்று ஓர் இலட்சியம் இல்லாதவர்கள். இவர்கள் புதிய யோசனைகளையும் புதிய கருத்துக்களையும் பின்பற்றாமல் வழக்கமான பாதைகளிலேயே செல்ல விரும்புவர்.
 
* இவர்களுக்கு நினைவாற்றல் அதிகம் இருக்கும். எதையும் எளிதில் மறந்துவிடமாட்டார்கள். எதையும் தாங்கும் இதயம்  இவர்களிடத்தில் உண்டு.

*இவர் எப்பொழுதும் சுத்தமான ஆடம்பரமான ஆடைகளை அணிவர். இவர்களிடத்தில் குறைகள் பல இருந்தாலும் மற்றவர்களின் குற்றங்குறைகளைப் பெரிது படுத்திப் பேசுவதில் வல்லவர்கள்.

*இவர்களுக்கு சிறுநீர், மூல சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவர்கள் காலத்தோடு சாப்பிடாத காரணத்தினால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

* இம்மாதத்தில் பிறந்தவர் வைரம் பதித்த மோதிரமும், வெண்மை நிறமும் நன்மை தரவல்லது. இவர்கள் கிழக்குத் திசையில் நன்மை பெறலாம்.


ஆனி:

* இந்த மாதத்தில் பிறந்தவர் உயரமாக இருப்பர். சரீரம் மெலிந்து காணப்படும். நீண்ட முகமும், அகன்ற எடுப்பான நெற்றியும் கொண்டவர்களாக இருப்பர். புருவம் நீண்டிருக்கும்.முக்கு நீண்டும், கூர்மையாகவும் காணப்படும்.செவிகளும் விரிந்து காணப்படும்.

* இவர்கள் ஆசாரம் மிகுந்தவர்கள். அச்சம் என்பது இவர்களுடன் பிறந்த குணமாகும். இவர்கள் எப்பொழுதும் தெளிவாகவும், மற்றவர்கள் மனதில் பதியும் வண்ணமும் பேசுவர்.

* இவர்கள் பொறுமைசாலிகள் அல்லர். இவர்கள் எதையும் தாங்கமாட்டார்கள். கஷ்டம் ஏற்பட்டால் துவண்டு விடுவர். இவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் ஈடுபடுவது ஆபத்தானது. இடையில் ஏதேனும் குறுக்கீடுகள் வந்தால் சொல்லிக் கொள்ளாமல் நழுவி விடுவார்கள்.

* இவரை யாரும் அடிமையாக்க முடியாது. அவ்வாறு அடிமையாக்க நினைத்தால் அந்த வேலையைத் தயங்காமல் விட்டுவிடுவர்.

* இந்த மாதத்தில் பிறந்தவர் எப்பொழுதும் ஆரோக்கியம் குறைந்தவராகவே காணப்படுவர். பித்தம், நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படும்.

*இம்மாதத்தில் பிறந்தவர்  பச்சைக் கல் பதித்த மோதிரமும், பச்சை நிறமும் நன்மை தரவல்லது. இவர்கள் வடகிழக்குத் திசையில் நன்மை பெறலாம்.

https://goo.gl/9SvsDa


24 Jul 2013

பிறந்த மாதமும் அதிர்ஷ்டப் பலன்களும்

17 Dec 2011

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

17 Dec 2011

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

17 Dec 2011

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

17 Dec 2011

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

17 Dec 2011

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

17 Dec 2011

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

17 Dec 2011

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

17 Dec 2011

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

17 Dec 2011

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி