பி.டி.உஷாவின் 28 ஆண்டு சாதனையை முறியடித்தார் பாரா-நீச்சல் வீரர் சரத்

பி.டி.உஷாவின் 28 ஆண்டு சாதனையை முறியடித்தார் பாரா-நீச்சல் வீரர் சரத்
தென்கொரியாவின் இன்ஷியோனில் நடைபெற்று வரும் ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில்

இந்தியா சார்பில் ஷரத் காயாக்வாத் ஆறு பதக்கங்களை வென்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இதுவரை ஆசிய போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற வீரராக பீடி உஷா மட்டுமே இருந்து வந்தார். அவர் மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்றிருந்தார்.

அச்சாதனையை முறியடித்து இந்தியாவுக்காக ஆறு பதக்கங்களை தற்போது வென்றிருக்கும் ஷரத் காயாக்வாத் 2012 பரா ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சல் வீரராக அறிமுகமானவர்.

200m Individual Medley நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம், 100 மீ பட்டர்ஃபிளை, 100 மீற்றர் பிரீஸ்ஸ்றோக், 100 மீ பக்ஸ்றோக், 50 மீற்றர் பிரீஸ்டைல் ஆகிய நீச்சல் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை ஷரத் காயாக்வாத் வென்றுள்ளார்.

இறுதியாக 4x100m Medley Relay  போட்டியில் சக இந்திய வீரர்களுடன் இணைந்து இன்னுமொரு வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

வெற்றிக் களிப்பில் தனது சந்தோசத்தை பகிர்ந்து கொண்டுள்ள ஷரத், கடந்த ஆறு மாதங்களாக இதற்காக தான் கடினமான நீச்சல் பயிற்சியை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

https://goo.gl/sQGp7h


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்