புற்றுநோயால் பாதிக்கபட்ட காதலனை மருத்துவமனையிலே திருமணம் செய்த காதலி

புற்றுநோயால் பாதிக்கபட்ட  காதலனை   மருத்துவமனையிலே  திருமணம் செய்த காதலி
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலனை மருத்துவமனையிலேயே காதலி திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.


இங்கிலாந்தைச் சேர்ந்த ரே கெர்ஷா என்பவருக்கும் ட்ரேசிக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென ரே கெர்ஷாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கெர்ஷாவை  பரிசோதித்த மருத்துவர்கள் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினர்.


மேலும் புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்ததால், கெர்ஷா இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வார் எனவும் மருத்துவர்கள் கூறினர்.

இதனால் ரே கெர்ஷா மற்றும் ட்ரேசி குடும்பத்தினர் கடும் சோகத்தில் மூழ்கினர். திருமணம் நிச்சயிக்கப்பட்டவுனேயே ரே கெர்ஷாயும், ட்ரேசியும் ஒருவரை ஒருவர் ஆழமாக காதலிக்கத் தொடங்கினர்.

காதலர்களாக பல இடங்களில் சுற்றித்திரிந்த இந்த ஜோடிகளுக்கு புற்றுநோய் குறித்த தகவல் பேரதிர்ச்சியாக இருந்தது.

இருப்பினும் மணமகள் ட்ரேசி மனத் தளராமல் ஒரு ஆச்சரியத்தக்க முடிவை எடுத்தார்.

அது, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது போல கெர்ஷாவை திருமணம் செய்து கொள்வது. இந்த முடிவு ட்ரேசியின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும் அதை வரவேற்றனர்.

இதனிடையே கெர்ஷாவினால் மருத்துவமனையிலிருந்து வெளியே வர முடியாது என்பதால், மருத்துவமனையிலேயே இருவருக்கும் திருமணம் நடத்தப்பட்டது.


இதற்கான ஏற்பாடுகள் வெறும் 24 மணி நேரத்தில் செய்யப்பட்டன. கெர்ஷாவின் நிலை குறித்து அறிந்த பல சமூக ஆர்வலர்கள், இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளையும், பரிசுப் பொருட்களையும் அன்பளிப்பாக அளித்தனர்.

இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழப்போவது தெரிந்தாலும், இந்த திருமணம் கெர்ஷாவுக்கு மன நிம்மதியை அளிக்கும் என மணமகள் ட்ரேசி தெரிவித்துள்ளார்.


பல ஆண்டுகள் காதலித்தவர்களை கழட்டி விட்டு செல்லும் காதலர்களுக்கு மத்தியில் புற்றுநோய் இருப்பது தெரிந்தும் கெர்ஷாவை கரம் பிடித்த ட்ரேசியின் காதல் மெய்சிலிர்க்க வைக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
https://goo.gl/8GWtZ2


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே