புளூவேல் கேம் பின்னணியில் செயல்பட்ட 17 வயது பெண் ரஷ்யாவில் கைது

புளூவேல் கேம் பின்னணியில் செயல்பட்ட 17 வயது பெண் ரஷ்யாவில் கைது
ஆன்லைனில் பலரது உயிர்களை பறித்த புளூ வேல் கேமினை உருவாக்க பின்புலமாக செயல்பட்டதாக 17 வயது பெண்மணியை ரஷ்ய போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சர்வதேச அளவில் சுமார் 100-க்கும் அதிகமானோர் தற்கொலை செய்து உயிரிழக்க காரணமாக இருக்கும் புளூ வேல் கேம் உருவாக்க முக்கிய காரணமாக இருந்து செயல்பட்டதாக 17 வயது பெண்மணி ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் புளூ வேல் சேலன்ஜ் என்ற பெயரில் வலம் வரும் ஆன்லைன் கேமினை 50 நாட்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். 50 நாட்களும் கேம் விளையாடுவோருக்கு கடினமான சவால்கள் வழங்கப்படும்.


திகில் நிறைந்த திரைப்படங்கள், அதிகாலையில் உறக்கத்தில் இருந்து எழுவது, அவர்களை தற்கொலைக்கு தூன்டும் வகையில் பல்வேறு சவால்கள் மற்றும் கைகளில் புளூ வேல் என கிழித்துக் கொள்வது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. புளூ வேல் இறுதி சவால் போட்டியாளர் தற்கொலை செய்து உயிரிழக்க வேண்டும்.   

ரஷ்ய உளவுத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பெயர் அறியப்படாத பெண்மணி புளூ வேல் கேம் விளையாடி, இறுதியில் தனது உயிரைவிடாமல் புளூ வேல் தளத்தை இயக்கும் பணியினை ஏற்றுக் கொண்டு பல்வேறு இளைஞர்களை கேம் விளையாட தூண்டி வருகிறார். மேலும் இந்த கேம் விளையாட பெண் தன்னை ஆணாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.  


கைது செய்யப்பட்ட பெண் வீட்டில் சோதனை செய்த போலீசார் அவரது வீட்டில் இருந்து கொடூரமான வரைப்படங்கள், புளூ வேல் சவால்களை உருவாக்கியவரும், நிறுவனரான 22-வயது பிலிப் புடெய்கின் வரைபடம் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர்.


முன்னதாக பிலிப் புடெய்கின் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ரஷ்ய உள்நாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களில் கைது செய்யப்பட்ட பெண்மணி போட்டியில் கலந்து கொண்டவர்கள் போட்டி விதிமுறைகளை பின்பற்றாத பட்சத்தில் போட்டியாளர் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை கொலை செய்வோம் என்ற வகையில் மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளூ வேல் தளத்தை இயக்கும் வகையில் பல்வேறு சவால்கள் மட்டுமின்றி போட்டியாளர்களை மிரட்டும் பணியினை அந்த பெண்மணி செய்து வந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://goo.gl/dfhkEt


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே