tamilkurinji logo


 

பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு ,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு

First Published : Sunday , 10th June 2018 07:07:06 PM
Last Updated : Sunday , 10th June 2018 07:07:06 PM


பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் இளவரசி (வயது 26). இவர், புதுவை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி எதிரே உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலை பார்த்து வருகிறார்.

இவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வரும் திருச்செந்தூரை சேர்ந்த யஷ்வந்தய்யா (28) என்பவர் பழக்கமானார். நாளடைவில் இது காதலாக மாறியது.

இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சில மாதங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் தாம்பத்திய உறவில் யஷ்வந்தய்யாவுக்கு நாட்டம் இல்லாததால் அவர் மீது இளவரசிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் விசாரித்த போது, யஷ்வந்தய்யா பெண்ணாக இருந்து ஆணாக மாறி அறுவை சிகிச்சை செய்திருப்பது இளவரசிக்கு தெரியவந்தது.

இதனால் யஷ்வந்தய்யாவை பிரிந்து இளவரசி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திருமண நாளையொட்டி இளவரசியை யஷ்வந்தய்யா சந்தித்தார். அப்போது இருவரும் சேர்ந்து வாழலாம் என அவர் இளவரசியிடம் வற்புறுத்தினார்.

ஆனால், இதற்கு இளவரசி சம்மதிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த யஷ்வந்தய்யா பாட்டிலில் தயாராக எடுத்து சென்ற பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.

தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்காமல் யஷ்வந்தய்யா அலறி துடித்தார். பின்னர் அருகில் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் உருண்டு புரண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யஷ்வந்தய்யாவை மீட்டு அவர் வேலை பார்க்கும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு யஷ்வந்தய்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பெண்ணாக இருந்து ஆணாக மாறி காதல் திருமணம் செய்தவர் தீக்குளிப்பு ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி

மேலும்...

 ஜிவாதான் என் மனஅழுத்தத்தைப் போக்குபவள்: தோனி உருக்கம்
என் மகள் ஜிவாதான் என் மனஅழுத்தத்தை போக்கும் மருந்து, மூன்றரை வயதிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்று மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்தோனியின் மூன்றரை வயது மகள் ஜிவா. சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in