tamilkurinji logo


 

பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்,Woman SP files sexual harassment complaint against IG

Woman,SP,files,sexual,harassment,complaint,against,IG




செய்திகள் >>> தமிழகம்

பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

First Published : Friday , 7th September 2018 01:47:16 PM
Last Updated : Friday , 7th September 2018 01:47:16 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்,Woman SP files sexual harassment complaint against IG

பாலியல் தொல்லை அளித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் எஸ்பி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் அந்த மனுவில், புகாருக்கு உள்ளான ஐஜி முருகனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பாலியல் புகாரை விசாரிக்கும் விசாகா கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் எனவும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் தெய்துள்ளார்.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் எஸ்பியாக உள்ள ஒரு பெண் அதிகாரியை அதே துறையில் பணியாற்றும் ஐஜி ஒருவர் அடிக்கடி தனது அறைக்கு அழைத்து ஆலோசனை நடத்தி முடித்ததும், ஆபாசமாக பேசி வந்துள்ளார்.

பின்னர் அதிகாரி எழுந்து செல்லும்போது பின்னால் இருந்து செல்போனில் படம் எடுத்து வந்துள்ளார். கேட்டால், நீங்கள் அழகாக சேலை கட்டியுள்ளீர்கள். அதை என் மனைவிக்கும் எடுத்து கொடுக்கப் போகிறேன் என்று இரட்டை அர்த்த வசனங்களில் பேசி வந்துள்ளார்.

இது குறித்து பல முறை எச்சரித்தும் அவர் திருந்தவில்லை. அதன் பின்னர் ஐஜியிடம் பெண் எஸ்பி நேரடியாகவே எச்சரித்துள்ளார். தன்னுடைய அதிகாரத்துக்கு பெண் எஸ்பி பயப்படாததால், அவரை மிரட்டத் தொடங்கியுள்ளார். எஸ்பியின் ஆண்டு அறிக்கையில் அவரைப் பற்றிய மதிப்பீட்டை குறைப்பதாகவும் மிரட்டியுள்ளார்.

கடந்த மாதம் 1ம் தேதி தனது அறைக்கு அழைத்த ஐஜி, பெண் எஸ்பி வந்ததும், கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். அவரை தள்ளிவிட்டு வெளியில் ஓடி வந்த எஸ்பி, இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மற்றும் டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையில் பெண் காவலர்கள், அதிகாரிகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில், கூடுதல் டிஜிபி அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி, மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு மற்றும் ஓய்வுபெற்ற எஸ்பி சரஸ்வதி அடங்கிய குழுவை அமைத்து  டிஜிபி உத்தரவிட்டார். ஆனால் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் பெண் எஸ்.பி., குறிப்பிட்டுள்ளார்.
பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்,Woman SP files sexual harassment complaint against IG பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்,Woman SP files sexual harassment complaint against IG பெண் எஸ்பி.யை கட்டிப்பிடித்த விவகாரம் : ஐஜி-யை பணியிட மாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்,Woman SP files sexual harassment complaint against IG
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 கழிவறைக் கட்டுவது மானியத்திற்காக அல்ல மானத்திற்காக" - பிரதமரிடம் சேலம் பெண் பெருமிதம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தூய்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகள்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in