tamilkurinji logo
 

பெரிய பாண்டியன் நினைவிடத்தில் நின்றபோது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது : நடிகர் கார்த்தி ,Karthi pays homage to Inspector Periyapandi tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Karthi,pays,homage,to,Inspector,Periyapandi,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


பெரிய பாண்டியன் நினைவிடத்தில் நின்றபோது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது : நடிகர் கார்த்தி

First Published : Friday , 15th December 2017 07:47:20 PM
Last Updated : Saturday , 16th December 2017 11:00:10 AM


பெரிய பாண்டியன் நினைவிடத்தில் நின்றபோது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது : நடிகர் கார்த்தி  ,Karthi pays homage to Inspector Periyapandi tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பவாரியா கொள்ளையர்களை தீரமுடன் பிடித்த போலீஸாரின் கதையில் வீரமுள்ள உதவி கமிஷனராக நடித்தபோதே இவ்வளவு கடினமான பணியையா போலீஸார் செய்தனர் என்று பிரமித்தேன்.

அதே போன்ற பணியில் உயிர் நீத்த பெரியபாண்டியனின் ஈரமுள்ள கல்லறைமுன் நிற்கும் போது மனம் பதைபதைத்துப் போனது என பெரியபாண்டி சமாதியில் அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் உள்ள சாலை புதுரை சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன். கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராஜஸ்தானுக்கு சென்று அங்கு இருந்த கொள்ளையர்களுடன் நடந்த சண்டையில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், துணை முதல்வர், காவல் உயர் அதிகாரிகள் அஞ்சலிக்குப் பின் அவரது சொந்த ஊரான சாலை புதூர் கொண்டு செல்லப்பட்டது.


அங்கு பொதுமக்கள் மரியாதைக்குப் பின்னர் நேற்று இரவு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

பெரிய பாண்டியன் வாழ்க்கையில் நடந்தது போலவே ராஜஸ்தானில் கொள்ளையர்களை தீரமுடன் பிடிக்கும் காவல் அதிகாரி பாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் கார்த்தி ஏற்கெனவே பெரியபாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி தென்காசியில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படபிடிப்பில் இருந்தார்.


பெரியபாண்டியனின் உடல் அடக்கம் அருகிலுள்ள ஊரில் நடந்ததை கேள்விப்பட்ட நடிகர் கார்த்தி அங்கு இருந்து 2 மணி நேர தொலைவில் உள்ள சாலை புதூருக்குச் சென்றார்.


 அங்கு அடக்கம் செய்யப்பட்டிருந்த பெரியபாண்டியன் சமாதியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் கார்த்தி கூறியதாவது:

''பெரியபாண்டியன் இல்லத்துக்குச் சென்று அவருடைய மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தேன். அப்போது அவர் என்னிடம், ''பெரிய பாண்டியன் மிகவும் தைரியமானவர் என்றும். அவர் கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தானுக்குச் சென்ற அதே நாளில்தான் நீங்கள் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தைப் பார்த்தேன்.

'தீரன்' படத்தைப் பார்த்ததும் இவ்வளவு கொடூரமான கொலைகார கொள்ளை கும்பலா? இதை போன்ற ஒரு கும்பலைதான் நம்முடைய கணவரும் பிடிக்கச் சென்றிருப்பாரோ என்று தோன்றியது.

அதன் பின் அவரை தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். 'தீரன்' படம் பார்த்தேன். அதில் வந்த பயங்கரமான காட்சிகளைப் பற்றிக் கூறி என்னுடைய கணவரிடம் கவனமாக இருங்கள், உங்களுடன் இன்னும் அதிகமான காவல் துறையினரை அழைத்துச் செல்லுங்கள். எனக்கு மனது சரியில்லை என்று கூறினேன்.


நான் அவருக்கு எதுவும் நடந்துவிட கூடாது என்று பயந்துகொண்டே இருக்கும்போது அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்தது'' என்றார் .

உண்மைச் சம்பவமான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் நடிக்கும் போதே எனக்கு எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என்று மனஅழுத்தமாக இருந்தது. தற்போது அது உண்மையாகவே ஒரு இன்ஸ்பெக்டருக்கு நடந்துள்ளது எனக்கு வருத்தத்தைத் தந்துள்ளது.

பெரியபாண்டியன் மிகவும் நல்ல மனிதர். அவர் கஷ்டப்பட்டு சேர்த்துவைத்த 15 சென்ட் இடத்தை அந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காகக் கொடுத்துள்ளார்.


அவர் கூலி வேலை செய்து வாழ்ந்த ஒரு தாயின் மகன் என்பதால் எப்போதும் தன்னைப் போல் கஷ்டம் இல்லாமல் எல்லோரும் வாழவேண்டும் என்று நினைத்திருந்தார்.


மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அதே நல்லெண்ணத்தில்தான் கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் பகுதிக்குச் சென்று வீர மரணம் அடைந்துள்ளார்.

இங்குள்ள மக்கள் அனைவரும் அவருடைய இடத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அப்படி அவருடைய பெயர் வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். நமது அரசாங்கம் கண்டிப்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் நிறைய அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும்.

 ஈரம் காயாத அவருடைய சமாதியில் நிற்கும் போது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது. அவருடைய ஆன்மாவுக்கும் , குடும்பத்தாருக்கும் பிரார்த்தனை செய்கிறேன்''என்று தெரிவித்தார் கார்த்தி.

பெரிய பாண்டியன் நினைவிடத்தில் நின்றபோது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது : நடிகர் கார்த்தி  ,Karthi pays homage to Inspector Periyapandi tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பெரிய பாண்டியன் நினைவிடத்தில் நின்றபோது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது : நடிகர் கார்த்தி  ,Karthi pays homage to Inspector Periyapandi tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பெரிய பாண்டியன் நினைவிடத்தில் நின்றபோது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது : நடிகர் கார்த்தி  ,Karthi pays homage to Inspector Periyapandi tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பெங்களூருவில் பிரபல கன்னட நடிகர் காசிநாத் மரணம்
பெங்களூருவில் பிரபல கன்னட திரைப்பட நடிகர் காசிநாத் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கன்னட திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.பிரபல கன்னட திரைப்பட நடிகர் காசிநாத் (வயது 67). இவர் சுமார் 43 கன்னட திரைப்படங்களில் நடிகராகநடித்துள்ளார். பல்வேறு

மேலும்...

 தேர்தலில் கமலுடன் கூட்டணியா? ரஜினிகாந்த் பதில்
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார். தனது ரசிகர் மன்றம் மூலமாக கட்சி பணிகள் குறித்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம்

மேலும்...

 உலகின் மிகவும் அழகான நடிகர் ஹிரித்திக் ரோஷன்
உலகளாவிய அளவில் பல கவர்ச்சிகரமான நடிகர்களை பின்னுக்குத்தள்ளி இந்த ஆண்டில் உலகின் மிகவும் அழகான நடிகராக (ஹேன்ட்ஸம்) பாலிவுட் நாயகன் ஹிரித்திக் ரோஷன் தேர்வாகியுள்ளார்.பன்னாடுகளை சேர்ந்த ஒரு சர்வதேச சர்வே நிறுவனம் 2018-ம் ஆண்டுக்கான ஹேன்ட்ஸம் நடிகர் யார்? என்பதை அறிய

மேலும்...

 'பிக் பாஸ்' ஜூலி கதாநாயகியாக நடிக்கும் 'உத்தமி'
ஜல்லிக்கட்டு போராட்டம், 'பிக்பாஸ்' மூலம் கவனம் ஈர்த்த ஜூலி தமிழ் சினிமாவில் ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இப்படத்துக்கு 'உத்தமி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in