tamilkurinji logo
 

பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய பைக்கில் சென்ற காதல் ஜோடி விபத்தில் பலி,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய பைக்கில் சென்ற காதல் ஜோடி விபத்தில் பலி

First Published : Wednesday , 6th June 2018 08:18:58 PM
Last Updated : Wednesday , 6th June 2018 08:18:58 PM


பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய பைக்கில் சென்ற காதல் ஜோடி விபத்தில் பலி,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

வேலூர் மாவட்டம் நெமிலி அருகே உள்ள வடகண்டிகை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் இவரது மகன் சரத்குமார் (வயது 20). அதே பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த கல்லூரியில் அசநெல்லிகுப்பம் இரட்டை மலை சீனிவாசன் தெருவை சேர்ந்த ஜெயபிரதா (20). என்பவர் படித்து வந்தார். ஒரே வகுப்பில் படித்த இருவருக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஜெயபிரதா குடும்பத்தினர் கடும் எதிப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சோளிங்கரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு சரத்குமார், ஜெயபிரதாவை அவரது வீட்டில் இருந்து பைக்கில் அழைத்து கொண்டு பாணாவரம் வழியாக சோளிங்கருக்கு சென்று கொண்டிருந்தார்.

பாணாவரம் அடுத்த மங்கலம் அருகே பைக் சென்ற போது நிலை தடுமாறி சிறிய பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தனர். படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவலறிந்த பாணாவரம் போலீசார் உடலை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய பைக்கில் சென்ற காதல் ஜோடி விபத்தில் பலி,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய பைக்கில் சென்ற காதல் ஜோடி விபத்தில் பலி,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய பைக்கில் சென்ற காதல் ஜோடி விபத்தில் பலி,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 விவசாயிகளுக்காக போராடினால் நக்சலைட்டா? பியூஷ் மனுஸ் சகோதரி கேள்வி
கோவையில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஸ் சகோதரி ஊர்வசி் லுனியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது- நேற்று முன்தினம் இரவு பியூஸ்மனுஷ் கைது செய்யப்பட்டது குறித்து குடும்பத்தினருக்கு காவல் துறையினர் முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. பியூஸ் மனுஷை கடத்தி

மேலும்...

 ரூ.80 கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது
காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் திருடு போன ரூ.80 கோடி மதிப்பிலான சுவாமி சிலைகளைக் கடத்தியவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோயிலில் இருந்த சிவன், பார்வதி சிலைகள்

மேலும்...

 சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி
சேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40

மேலும்...

 தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது
2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒரு முடிவு காணப்படாத நிலை இருந்தது.எய்ம்ஸ்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in