tamilkurinji logo
 

பேருந்துக்கு அடியில் சடலம் சிக்கியது தெரியாமல் 70 கி.மீ. பஸ் ஓட்டிய ஓட்டுநர் கைது,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

பேருந்துக்கு அடியில் சடலம் சிக்கியது தெரியாமல் 70 கி.மீ. பஸ் ஓட்டிய ஓட்டுநர் கைது

First Published : Monday , 5th February 2018 01:44:37 PM
Last Updated : Monday , 5th February 2018 01:44:37 PM


பேருந்துக்கு அடியில் சடலம் சிக்கியது தெரியாமல் 70 கி.மீ.   பஸ் ஓட்டிய ஓட்டுநர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


கர்நாடக அரசு  அடியில் சடலம் சிக்கியது தெரியாமல், 70 கி.மீ. தூரம் ஓட்டி சென்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் குன்னூரில் இருந்து பெங்களூருவுக்கு கர்நாடக அரசு பேருந்து புறப்பட்டுள்ளது. தூங்கும் வசதி கொண்ட அந்த பேருந்தை மொகினுதீன் (45) ஓட்டிச் சென்றார்.

பெங்களூரு சாந்திநகர் டெப்போவை கடந்த சனிக்கிழமை அதிகாலை 2.35 மணிக்கு அடைந்ததும், பேருந்தை விட்டுவிட்டு ஓட்டுநர் மொகினுதீன் ஓய்வெடுக்க சென்று விட்டார்.

அதன்பின், பேருந்தை சுத்தப்படுத்த காலை 8 மணிக்கு ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். அப்போது, பேருந்துக்கு அடியில் சடலம் சிக்கியிருப்பதை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக வில்சன் கார்டன் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வந்து மொகினுதீனை கைது செய்தனர்.

போலீஸிடம் அவர் கூறும்போது, ‘‘குன்னூரில் இருந்து மைசூரு - மாண்டியா - சென்னப்பட்டனா வழியாக பெங்களூரு வந்தேன். சென்னப்பட்டனாவை அடைந்த போது ‘தொப்’பென்று ஏதோ சத்தம் கேட்டது. (அங்கிருந்து பெங்களூரு 70 கி.மீ. தூரம் உள்ளது.)

உடனே இருபக்க கண்ணாடிகள் வழியே பார்த்தேன். எனக்கு எதுவும் தெரியவில்லை. அதனால் பேருந்து அடியில் கல் ஏதாவது பட்டிருக்கும் என்று நினைத்து தொடர்ந்து ஓட்டி வந்தேன்’’ என்று கூறியுள்ளார்.

உயிரிழந்தவருக்கு 30 முதல் 40-க்குள் வயதிருக்கும் என்று கூறுகின்றனர். விக்டோரியா மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. எல்லா போலீஸ் நிலையங்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொகினுதீன் 10 ஆண்டு அனுபவம் உள்ள ஓட்டுநர். இதுவரை அவர் விபத்து ஏதும் ஏற்படுத்தியதில்லை.



பேருந்துக்கு அடியில் சடலம் சிக்கியது தெரியாமல் 70 கி.மீ.   பஸ் ஓட்டிய ஓட்டுநர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பேருந்துக்கு அடியில் சடலம் சிக்கியது தெரியாமல் 70 கி.மீ.   பஸ் ஓட்டிய ஓட்டுநர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பேருந்துக்கு அடியில் சடலம் சிக்கியது தெரியாமல் 70 கி.மீ.   பஸ் ஓட்டிய ஓட்டுநர் கைது,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கர்ப்பிணிப் பெண் துண்டுதுண்டாக வெட்டி கொலை
ஐதராபாத்தில் கர்ப்பிணிப் பெண்ணை பளிங்குக் கல் வெட்டும் எந்திரத்தில் துண்டாக துண்டாக வெட்டி கொலை செய்தவர்களை நீண்ட விசாரணைக்கு பின் வீடியோவில் கிடைத்த வழுக்கைத் தலை காட்சி மூலம் போலீசார் கைது செய்தனர்.இது குறித்து ஐதராபாத் போலீஸ் ஆணையர் சந்தீப் ஷான்டில்யா

மேலும்...

 பிறந்த குழந்தையை 5 மாதமாக தாயிடம் தர மறுத்த மருத்துவமனை
டெலிவரிக்கு உண்டான பில் தொகையை செலுத்ததால் பிறந்த குழந்தையை 5 மாதங்களாக பெற்ற அன்னையிடம் மருத்துவமனை தர மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காபான் என்ற நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா ஓகோம் என்ற கர்ப்பிணி

மேலும்...

 ராஜஸ்தானில் பூமிக்கு அடியில் 11 கோடி டன் தங்கம்: ஆராய்ச்சியாளர்கள் உறுதி
ராஜஸ்தான் மாநிலம் உதய்பர், பன்ஸ்வாரா பகுதியில் பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் 11 கோடி டன் தங்கம் இருப்பதை வரலாற்று ஆய்வாளர்களும், புவியியல் வல்லுநர்களும் உறுதி செய்துள்ளனர்.இது குறித்து ஜெய்ப்பூரில் இந்திய புவியியல் மையத்தின் இயக்குநர் என் குடும்பா ராவ்

மேலும்...

 இந்தியாவிலேயே மிகவும் வசதியான முதல்வர் சந்திர பாபு நாயுடு : ஆய்வறிக்கையில் தகவல்
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிக சொத்துகள் கொண்ட முதல்வராக முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் சொத்துப் பட்டியலில் கடைசி இடத்தில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் இருக்கிறார்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in