பேஸ்புக்கில் கவர்ச்சி படம் வெளியிட்டு வாலிபர்களிடம் பணம் பறித்த இளம்பெண் கைது

பேஸ்புக்கில் கவர்ச்சி படம் வெளியிட்டு வாலிபர்களிடம் பணம் பறித்த இளம்பெண் கைது
திருவனந்தபுரத்தில் பேஸ்புக்  மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி வாலிபர்களை வீட்டுக்கு வரவழைத்து மிரட்டி பணம்  பறித்த கணவன், மனைவி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள  மாநிலம் திருவனந்தபுரம் கவடியார் மந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு  (24).

இவரது மனைவி ஜினுஜெயன் (19). இருவரும் பேட்டையில்  உள்ள பகத்சிங்ரோட்டில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

ஜினு தனது  பெயரில் பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். அதில் தனது கவர்ச்சிகரமான  புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

இதை பார்த்து பல வாலிபர்கள்  அவருடன் நண்பர்களாகியுள்ளனர். இவ்வாறு நண்பராகும் வாலிபர்களை தனது  வீட்டுக்கு வரவழைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

இந்த  நிலையில் திருவனந்தபுரம் மணக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர்  பேஸ்புக்கில் ஜினுஜெயனுடன் நட்பானார். கடந்த சில மாதங்களாக இவர்கள்  பேஸ்புக்கில் சாட்டிங் செய்து வந்தனர்.

இந்த பழக்கம் காரணமாக ஜினு அந்த  மாணவரை வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.


அவரது அழைப்பை ஏற்று அந்த மாணவர்  தனது நண்பரை அழைத்துக்கொண்டு பேட்டையில் உள்ள ஜினுஜெயன் வீட்டுக்கு  சென்றார்.

அப்போது விஷ்ணுவும், அவரது கூட்டாளிகள் சிலரும்  வீட்டுக்கு வெளியே காரில் மறைந்து இருந்தனர். வாலிபர்கள் 2 பேரும்  வீட்டுக்குள் சென்றதும் விஷ்ணுவும் அவரது கூட்டாளிகளும் வீட்டுக்குள்  அதிரடியாக புகுந்து அவர்களிடம் தகராறு செய்துள்ளனர்.

அப்போது நீங்கள் தவறான  நோக்கில் வீட்டுக்கு வந்துள்ளீர்கள். உங்கள் மீது போலீசில் புகார் அளிக்க  போகிறேன். புகார் அளிக்க வேண்டாம் என்றால் பணம் தரவேண்டும் என கேட்டு  அவர்களின் ஏடிஎம் கார்டுகளையும், செல்ேபான்களையும் பறித்துள்ளனர்.

 பின்னர்  ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.50 ஆயிரம் எடுத்துள்ளனர். இதுகுறித்து அந்த  மாணவர் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.


 போலீசார் விஷ்ணு, ஜினு,  அவரது நண்பர்கள் திருவனந்தபுரம் வெட்டுகாடு பகுதியை சேர்ந்த ஆஷிக்,  அபின்ஷா (22), மாதவபுரம் மன்சூர் (20), வழயிலா பகுதியை சேர்ந்த ஸ்டாலின்  (36), சிறையின்கீழ் பகுதியை சேர்ந்த விவேக் (21) ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில்  இவர்கள் இதுபோல் மேலும் பலரை ஏமாற்றி வீட்டுக்கு வரழைத்து பணத்ைத பறித்தது  தெரியவந்தது. விசாரணைக்கு பின் அவர்களை திருவனந்தபுரம் தலைமை குற்றவியல்  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

https://goo.gl/P4quco


19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்

06 Feb 2019

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை