tamilkurinji logo


 

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை இயக்குங்கள்:உயர் நீதிமன்றம் உத்தரவு,Considering-the-welfare-of-the-public-Run-the-bus.

Considering-the-welfare-of-the-public-Run-the-bus.
செய்திகள் >>> தமிழகம்

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை இயக்குங்கள்:உயர் நீதிமன்றம் உத்தரவு

First Published : Wednesday , 10th January 2018 06:55:32 PM
Last Updated : Wednesday , 10th January 2018 06:55:32 PM


பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை இயக்குங்கள்:உயர் நீதிமன்றம் உத்தரவு,Considering-the-welfare-of-the-public-Run-the-bus.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது.

இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

ரூ.750 கோடி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் சட்டசபையில் அறிவித்த நிலையில், 7000 கோடி ரூபாய் நிலுவைத்தொகை உள்ள நிலையில், 750 கோடி ரூபாய் ஏற்க முடியாது என்று கூறிய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவித்தனர்.

இந்நிலையில், வேலை நிறுத்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நோட்டீஸ் அளித்த பின்னரே தற்போது ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறோம் என்று சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் சார்பில் வாதாடப்பட்டது.

ஓராண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்துள்ளதாக தொ.மு.ச வழக்கறிஞர் வாதிட்டார்.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள ஒப்பந்தத்தை திரும்பபெற்று, பேச்சுவார்த்தையை தொடர்ந்தால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டு பேருந்துகள் இயக்கப்படும் - உயர்நீதிமன்றத்தில் தொழிற்சங்கம் தரப்பு வாதம்

இதனையடுத்து பேசிய நீதிபதிகள், 0.13 சதவிகித காரணிதான் பிரச்சனையாக உள்ளது என்பதை நீதிமன்றம் அறிகிறது. இந்த பிரச்சினையை பின்னர் விசாரிக்கலாம். தொழிற்சங்கங்களின் கோரிக்கையை இறுதி உத்தரவில் பார்த்துக்கொள்கிறோம்.

ஆனால், பொங்கல் நேரம் என்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை இன்றே இயக்க வேண்டும் என தொழிற்சங்கங்களை நீதிபதிகள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.


பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை இயக்குங்கள்:உயர் நீதிமன்றம் உத்தரவு,Considering-the-welfare-of-the-public-Run-the-bus. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை இயக்குங்கள்:உயர் நீதிமன்றம் உத்தரவு,Considering-the-welfare-of-the-public-Run-the-bus. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பஸ்களை இயக்குங்கள்:உயர் நீதிமன்றம் உத்தரவு,Considering-the-welfare-of-the-public-Run-the-bus.
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை
 திருப்பத்தூா் அருகே தனியாக வீட்டில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூா் அருகே கீழச்சிவல்பட்டி ஒன்றியத்தைச் சோ்ந்த அச்சரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அழகு என்பவர்  மகள் அழகுதேவி(17). வாய் பேச முடியாத

மேலும்...

 சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி
சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கு: குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட  தூக்குதண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சென்னை மாங்காட்டை அடுத்த மெளலிவாக்கம்

மேலும்...

 ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ப.சிதம்பம் , கார்த்தி சிதம்பரத்தை ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்தையும் ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடையை நீடித்து அமலாக்கத்துறைக்கு பாட்டியாலா

மேலும்...

 தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்க கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. ஒரு வினாவுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 49 வினாக்களுக்கு மொத்தமாக 196 மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மார்க்சிஸ்ட்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in