tamilkurinji logo


 

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப உயர் நீதிமன்றம் உத்தரவு ,Madras High Court directs T.N. transport employees to return to work ...tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Madras,High,Court,directs,T.N.,transport,employees,to,return,to,work,...tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> தமிழகம்

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

First Published : Friday , 5th January 2018 08:02:07 PM
Last Updated : Friday , 5th January 2018 08:02:07 PM


போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப  உயர் நீதிமன்றம் உத்தரவு ,Madras High Court directs T.N. transport employees to return to work ...tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

 வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் தொடர்பாக நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜேந்திரன் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் முறையீடு செய்தார்.

பேச்சுவார்த்தை நடக்கும் போதே போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்கள், மாணவர்கள், வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதனால் 24 மணிநேரத்திற்குள் அரசு தலையிட்டு சுமுகத் தீர்வு காண உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதுதொடர்பாக தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்காக விசாரணைக்கு எடுக்க மறுத்த நீதிபதிகள், மனுதாரர் மனுவாக தாக்கல் செய்தால் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பபடும் என தெரிவித்தனர்.

அதன் படி முறையீடு செய்யப்பட்டு அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கமான வழக்காகத்தான் இதை விசாரிப்போம் என்று தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வக்கீல் விஜய் நாராயண், '' ஏற்கெனவே 10 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.

நேற்றைய பேச்சில் 2.44 மடங்கு உயர்வு வழங்க முடிவெடுத்தோம். தொடக்க நிலை ஊழியர்கள் 25 ஆயிரம், மூத்த ஊழியர்கள் 50 ஆயிரம் ஊதியம் பெறுகின்றனர்.


46 சங்கங்களில் 32 சங்கங்கள் ஏற்றுக்கொண்டதாக கையெழுத்திட்டுள்ளன.  14 சங்கங்கள் ஒத்துக்கொள்ளவில்லை'' என்று தெரிவித்தார்.

எதிர் மனுதாரராக போக்குவரத்து சங்கங்கள் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள், செவிலியர்கள் போராட்டங்களின் போதும் நீதிமன்றம் பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும்,  நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,  அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் படி செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டத்தின் போது நீதிமன்றம் பல அறிவுரைகள் மற்றும் உத்தரவுகளை வழங்கியது போல, போக்குவரத்து ஊழியர்களும் தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

உடனடியாக  பணிக்குத்  திரும்பாவிட்டால் பணி நீக்கம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். 

குறிப்பாக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தங்களுடைய பணியில் சேர வேண்டும். வேலை நிறுத்த சங்கங்களுக்கு உரிய நோட்டீஸ் கொடுத்து அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.


போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப  உயர் நீதிமன்றம் உத்தரவு ,Madras High Court directs T.N. transport employees to return to work ...tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப  உயர் நீதிமன்றம் உத்தரவு ,Madras High Court directs T.N. transport employees to return to work ...tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப  உயர் நீதிமன்றம் உத்தரவு ,Madras High Court directs T.N. transport employees to return to work ...tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி
சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கு: குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி சிறுமி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட  தூக்குதண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சென்னை மாங்காட்டை அடுத்த மெளலிவாக்கம்

மேலும்...

 திருப்பூர் தொழில் அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை
திருப்பூர் பாளையகாடு காயத்ரி நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (52). தொழில் அதிபர். தனியாக நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் மொத்தமாக நூல்களை வாங்கி விற்பனை செய்தும் வந்தார்.இவருக்கு சிகப்பி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.நேற்று மதியம் தொழில்

மேலும்...

 ஏர்செல் மேக்சிஸ் வழக்கு ப.சிதம்பம் , கார்த்தி சிதம்பரத்தை ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்தையும் ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடையை நீடித்து அமலாக்கத்துறைக்கு பாட்டியாலா

மேலும்...

 தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்க கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. ஒரு வினாவுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 49 வினாக்களுக்கு மொத்தமாக 196 மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மார்க்சிஸ்ட்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in