tamilkurinji logo


 

போலீஸ்காரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த பெண் ,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

போலீஸ்காரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த பெண்

First Published : Wednesday , 18th July 2018 12:02:53 PM
Last Updated : Wednesday , 18th July 2018 12:02:53 PM


போலீஸ்காரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த பெண் ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

பஞ்சாப் மாநிலம் பரிதாகோட் நகரில் போலீஸ்காரரை  மரத்தில் கட்டி வைத்து பெண் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் இளைஞர் ஒருவர் தன்னுடைய செல்போனில் அதனை படமாக பிடித்து இணையதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, வீடியோவும் இணையத்தில் வைரலானது.

பின்னர் சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் சம்மந்தப்பட்ட பெண்ணிடம் இருந்து போலீஸ்காரரை  மீட்டு, சிகிச்சைக்காக குரு கோபிந்த் சிங் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 இதுகுறித்து  காவல்துறை உயர் அதிகாரி முக்தர் சிங் கூறியதாவது:-

 சதார் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் இக்பால் சிங்  இவர் சம்மந்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று, அவரிடம் அத்துமீற முயன்றதாலே மரத்தில் கட்டி வைத்து அடித்ததாக பெண் தரப்பை சார்ந்தவர்கள் கூறியுள்ளனர். அதேசமயம் இதுகுறித்து இக்பால் சிங் தரப்பில்  உள்ளூர் கடையிலிருந்து சம்மந்தப்பட்ட பெண் வாசிங்மெஷின் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், அதை பற்றி விசாரிக்க வீட்டிற்கு வந்த பொழுது பணத்தை கொடுக்க மறுத்து தாக்குதல் நடத்தியதாகவும் இக்பால் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இருவர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றம் செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


போலீஸ்காரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த பெண் ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema போலீஸ்காரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த பெண் ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema போலீஸ்காரரை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த பெண் ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி

மேலும்...

 ஜிவாதான் என் மனஅழுத்தத்தைப் போக்குபவள்: தோனி உருக்கம்
என் மகள் ஜிவாதான் என் மனஅழுத்தத்தை போக்கும் மருந்து, மூன்றரை வயதிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்று மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்தோனியின் மூன்றரை வயது மகள் ஜிவா. சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in