போலீஸ் ரெய்டு - மாடியில் இருந்து குதித்து 2 பாலியல் தொழிலாளிகள் பலி

போலீஸ் ரெய்டு - மாடியில் இருந்து குதித்து 2 பாலியல் தொழிலாளிகள் பலி
 மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள காமாத்ரிபுத்ரா போன்ற சிவப்பு விளக்கு பகுதிகளில் உரிய அனுமதி பெற்று பாலியல் தொழிலில் பல பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுதவிர, போலீசாருக்கு தெரியாமல் ரகசியமாக சில இடங்களில் இந்த தொழில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், டி.டி. மார்க் காவல் நிலைய போலீசார் நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் தெற்கு மும்பையின் கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்குள் அதிரடியாக சோதனையிட நுழைந்தனர்.

மேலே பல பாலியல் தொழிலாளிகள் தங்களது வாடிக்கையாளர்களுடன் இருப்பதால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் பணியாளர்கள், கீழே போலீசார் வந்திருப்பதை மேல் மாடியில் இருந்தவர்களிடம் தெரியப்படுத்தினர்.

இதில் பதற்றமடைந்த இரு பெண்கள் மூன்றாவது மாடி அறையில் இருந்து ஒரு கயிற்றின் உதவியுடன் கீழே குதிக்க முயன்றனர். ஆனால், இருட்டில் பிடிநழுவி அவர்கள் கீழே விழுந்து காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்தனர்.

இதை கண்ட போலீசார் அவர்களை பைக்குல்லா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த சுமார் 50 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க அந்த இரு பெண்களும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
https://goo.gl/qs244H


18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

10 Dec 2018

நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்

16 Oct 2018

நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

11 Oct 2018

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

10 Oct 2018

சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்