tamilkurinji logo
 

மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை

First Published : Friday , 1st June 2018 01:20:50 PM
Last Updated : Friday , 1st June 2018 01:20:50 PM


மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் உள்ள காந்தி நகரில் வசிப்பவர் சக்தி நாதன். பெயிண்டராக வேலை பார்க்கிறார்.

இவரது மனைவி உமா மகேஸ்வரி (35). மகன் யுவராஜ் (14). 8-ம் வகுப்பு முடித்து 9-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். மகள் பெயர் பூஜா (12). 6-ம் வகுப்பு முடித்து 7-ம் வகுப்பு செல்கிறார்.

கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் உமா மகேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் உமா மகேஸ்வரி தனது 2 பிள்ளைகளுக்கு வி‌ஷம் கொடுத்தார். பிறகு தானும் வி‌ஷம் குடித்தார்.

சிறிது நேரத்தில் 3 பேரும் வாயில் நுரை தள்ளிய படி மயங்கி விழுந்தனர். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய தாய் மற்றும் குழந்தைகளையும் மீட்டு ஈரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உமாமகேஸ்வரி, மகன் யுவராஜ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுமி பூஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை செய்து கொண்ட உமா மகேஸ்வரியின் சொந்த ஊர் கரூர் அடுத்த நத்தமேடு ஆகும். இவரது முதல் கணவர் சுந்தர் ராஜன். இவர் உமா மகேஸ்வரியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இவர்களது வீட்டில் சக்தி நாதன் குடியிருந்து வந்தார். கணவர் பிரிந்து சென்றதும் சக்திநாதனை 2-ம் திருமணம் செய்து கொண்டு சென்னி மலையில் உமா மகேஸ்வரி புதிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தான் 2-வது கணவருடனும் ஏற்பட்ட தகராறில் உமா மகேஸ்வரி இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்த தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 விவசாயிகளுக்காக போராடினால் நக்சலைட்டா? பியூஷ் மனுஸ் சகோதரி கேள்வி
கோவையில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஸ் சகோதரி ஊர்வசி் லுனியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது- நேற்று முன்தினம் இரவு பியூஸ்மனுஷ் கைது செய்யப்பட்டது குறித்து குடும்பத்தினருக்கு காவல் துறையினர் முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. பியூஸ் மனுஷை கடத்தி

மேலும்...

 ரூ.80 கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது
காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் திருடு போன ரூ.80 கோடி மதிப்பிலான சுவாமி சிலைகளைக் கடத்தியவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோயிலில் இருந்த சிவன், பார்வதி சிலைகள்

மேலும்...

 சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி
சேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40

மேலும்...

 தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது
2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒரு முடிவு காணப்படாத நிலை இருந்தது.எய்ம்ஸ்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in