மகரவிளக்கு பூஜை - சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு

மகரவிளக்கு பூஜை - சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை திருவிழா மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.அதன்படி, இந்த ஆண்டின் மண்டல பூஜை திருவிழா கடந்த மாதம் 16–ந் தேதி தொடங்கி, 26–ந் தேதி நிறைவடைந்தது. விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். கடந்த 26–ந்தேதி இரவில் கோவில் நடை அடைக்கப்பட்டது.

இந்த நிலையில், 3 நாள் இடைவெளிக்கு பிறகு, மகரவிளக்கு பூஜை திருவிழாவுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலை யில், மேல்சாந்தி என்.தாமோதரன் போற்றி திருநடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து அய்யப்பனுக்கு தீபாராதனை நடந்தது.அதன் பிறகு, கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள், மகர விளக்கு பூஜை திருவிழாவுக்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்றன. நடை திறப்பையொட்டி, சபரிமலையில் நேற்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (திங்கட்கிழமை) முதல், தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், உஷபூஜை, நெய்அபிஷேகம், உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை உள்பட பல்வேறு பூஜை–வழிபாடுகள் நடைபெறுகிறது.பிரசித்திபெற்ற மகர விளக்கு பூஜை வருகிற 14–ந் தேதி மாலை நடக்கிறது. இந்த பூஜை திருவிழா காலத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் ஜனவரி 11–ந் தேதி தொடங்குகிறது.மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, அம்பலப்புழை மற்றும் ஆலங்காட்டு பக்தர்கள் சங்கங்களின் எருமேலி பேட்டை துள்ளல் நிகழ்ச்சி ஜனவரி 11–ந் தேதி நடைபெறுகிறது.

மகர சங்கிரம பூஜையின் போது அய்யனுக்கு அணிவிப்பதற்கான தங்கத் திருவாபரணங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து 12–ந் தேதி ஊர்வலமாக சபரிமலை நோக்கி புறப்படும். பம்பை விளக்கு மற்றும் பம்பை விருந்து ஆகிய நிகழ்ச்சிகள் 13–ந் தேதி நடக்கிறது.மாளிகைப்புறத்தில் எழுந்தருளல் மற்றும் களமெழுத்து நிகழ்ச்சிகள் 14–ந் தேதி தொடங்கும். நெய் அபி ஷேகம் 18–ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் நிறைவாக 19–ந் தேதி இரவு மாளிகைப்புறம் கோவிலில் குருதி பூஜை நடைபெறும். 20–ந் தேதி காலை 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

மகர விளக்கு பூஜை திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சிறப்பான தரிசன வசதிகள் செய்வதற்காக கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மகர விளக்கு பூஜை திருவிழாவுக்காக நேற்று கோவில் நடை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே சாமி தரிசனம் செய்வதற்காக எருமேலியில் பேட்டை துள்ளிவிட்டு, பெருவழி காட்டுப்பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் நேற்று பிற்பகல் பம்பையில் இருந்து மலை ஏறிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின்னர் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
https://goo.gl/iJZqju






28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு