மகளை கவுரவ கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை

மகளை கவுரவ கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை
பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவர் பர்வீண் பீபி. இவரது மகள் ஜீனத் (வயது 18) கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்தினர் அனுமதி இன்றி ஹசன்கான் என்பவருடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார்.


அதன்பின்னர் ஜீனத் பெற்றோர் வீட்டுக்கு செல்வதற்கு பயந்துபோய் கணவருடன் வசித்துவந்த சமயத்தில், அவரது தாய் பர்வீண் மற்றும் குடும்பத்தினர் பாரம்பரிய முறைப்படி திருமண வரவேற்பு நடத்துவதாக கூறி அழைத்தனர்.

வீட்டுக்கு வந்த ஜீனத்தை அவரது தாய் பர்வீண் மற்றும் சகோதரர் அனீஸ் ஆகியோர் தாக்கினார்கள். ஆத்திரம் அடங்காத பர்வீண் தனது மகள் ஜீனத் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்தார். இதில் ஜீனத் உடல்கருகி பரிதாபமாக இறந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, மகளை கவுரவ கொலை செய்த பர்வீணுக்கு மரண தண்டனையும், அனீசுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறியது.

அந்நாட்டு பாராளுமன்றம் கவுரவ கொலைக்கான தண்டனையை கடுமையாக்கி புதிய சட்டத்தை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/5TdNZB


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே