மகள் கண்முன்னே பயங்கரம் தந்தை சரமாரியாக வெட்டி படுகொலை

மகள் கண்முன்னே பயங்கரம் தந்தை சரமாரியாக வெட்டி படுகொலை

மகளை கல்லூரியில் விட சென்ற ரியல் எஸ்டேட் அதிபரை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 4 ேபர் வழிமறித்து பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த சம்பவம் மேற்கு  மாம்பலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலம் நாயக்கர்மார் தெருவை சேர்ந்தவர் கந்தன்(43). ரியஸ் எஸ்டேட் தொழில் ெசய்து வரும் இவருக்கு, மனைவி புவனேஸ்வரி, மகள் கீர்த்தனா(18), மகன் ரமேஷ்(22) உள்ளனர். அடையாறில் உள்ள டாக்டர்  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மகள் கீர்த்தனாவை தினமும் கந்தன் தனது ஸ்கூட்டரில் விட்டுவிட்டுவருவது வழக்கம்.

அதன்படி நேற்று காலை 7.30 மணி அளவில் கந்தன், மகள் கீர்த்தனாவை  ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

மேற்கு மாம்பலம் ஏரி கரை முத்தாலம்மன் கோவில் தெரு அருகே வரும்  போது ஏற்கனவே ஆட்டோவில் மறைந்து இருந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென கந்தன் வந்த ஸ்கூட்டரை வழிமறித்தனர்.

அப்போது கந்தன் ஏதோ அசம்பாவிதம் நடக்க ேபாகிறது என்று அறிந்து மகளை காப்பாற்ற தனது ஸ்கூட்டரை வேகமாக ஓட்டினார். அப்போது மர்ம நபர்கள் விடாமல் ஸ்கூட்டர் பின்னால் ஓடி வந்து கந்தனை அரிவாளால்  வெட்டினர்.

இதில் நிலை தடுமாறி கந்தன் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார்.உடனே மகளை அங்கிருந்து ஓடிவிடு என்று கத்தியுள்ளார்.

ஆனால், மகள் கீர்த்தனா தந்தையை விட்டு செல்லாமல் அலறியபடி காப்பாற்றுங்கள் காப்பாத்துங்கள் என்று கத்தினார்.

இதைபார்த்த பொதுமக்கள் கூலிப்படைக்கு பயந்து  உயிர் பிழைத்தால் போதும் என்று கந்தனை காப்பாற்ற முயற்சிக்காமலும், கூலிப்படையை விரட்டவும் தயங்கி நாலாபுறமும் சிதறி ஓடினர்.

அதற்குள் மர்ம நபர்கள் கந்தனை சரமாரியாக வெட்டினர். அப்போது தந்தையை காப்பாற்ற கீர்த்தனா முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கீர்த்தனாவையும் வெட்டினர்.


இதில் அவருக்கு கையில் பலமாக வெட்டு  விழுந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் கந்தன் உடல் முழுவதும் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.


அப்போதும் ஆத்திரம் தீராத மர்ம நபர்கள் கந்தன் இறந்ததை உறுதி செய்து  கொண்ட பின்னரே ஆட்டோவில் தப்பி சென்றனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த குமரன் நகர் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த கீர்த்தனாவை மீட்டு சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


அதை தொடர்ந்து உயிரிழந்த கந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், படுகொலை நடந்த பகுதியில்  உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர்.

அதில் படுகொலை செய்த நபர்களில் இருவர் தலைக்கவசம் அணிந்து கொண்டும், மற்ற இரண்டு பேர் சாதாரணமாகவும் இருந்தது தெரியவந்தது. அவர்களில் 2 பேர் கந்தனின்  நண்பர் லோகாவின் கூட்டாளிகள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி லோகா என்பவருடன் சேர்ந்து கந்தன் கேபிள் டிவி நடத்தி வந்ததாகவும், இருவரும் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்தில்  ஈடுபட்டு வந்துள்ளனர்.


அப்போது கடந்த 2010ம் ஆண்டு மாம்பலம் பகுதியில் ராஜ்(எ) பல்ராஜ் என்பவரை படுகொலை செய்து வழக்கில் கந்தன் மற்றும் லோகா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இதற்கிடையே லோகாவிற்கும்  கந்தனுக்கும் இடையே கேபிள் டிவியில் பங்கு பிரிப்பதில் பிரச்னை ஏற்பட்டது.

இதனால் இருவரும் பிரிந்து விட்டனர். இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த லோகா தலைமறைவாக இருந்த போது அவர் இருக்கும் இடத்தை கந்தன் காட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்படி போலீசார் லோகாவை  கைது செய்தனர். பின்னர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் லோகாவை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த லோகா,  கந்தனை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி நேற்று மகளை கல்லூரிக்கு அழைத்து செல்லும் போது வழிமறித்து கந்தனை படுகொலை செய்தது தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் கந்தனை படுகொலை செய்த 4 ேபரையும், லோகாவையும் தீவிரமாக தேடி வருகின்றனர். பொது மக்கள் முன்னிலையில் நடந்த இந்த படுகொலை சம்பவம் மேற்கு மாம்பலம் பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.
https://goo.gl/8aoGPV


14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்

10 Dec 2018

கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்