tamilkurinji logo


 

மக்களுக்கு அமைதியையும், எல்லையில் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை: பிரதமர் மோடி ,Narendra Modi: Latest News, Photos, Videos on Narendra Modi ..

Narendra,Modi:,Latest,News,,Photos,,Videos,on,Narendra,Modi,..




செய்திகள் >>> தமிழகம்

மக்களுக்கு அமைதியையும், எல்லையில் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை: பிரதமர் மோடி

First Published : Thursday , 12th April 2018 01:42:14 PM
Last Updated : Thursday , 12th April 2018 01:42:14 PM


மக்களுக்கு அமைதியையும், எல்லையில் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை: பிரதமர் மோடி ,Narendra Modi: Latest News, Photos, Videos on Narendra Modi ..

நாட்டு மக்களுக்கு அமைதியையும், எல்லையில் பாதுகாப்பையும் வழங்குதற்கு அரசு கடமைப்பட்டுள்ளது. அதற்காக ராணுவம், பாதுகாப்பு பிரிவினருக்கு தேவையான கருவிகளை மேம்படுத்துவது அவசியமாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறை சார்பில் ‘டெபெக்ஸ்போ-2018’ என்ற ராணுவத் தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 11-ம் தேதி தொடங்கிய கண்காட்சி 14-ம் தேதிவரை நடக்கிறது.

ஏறக்குறைய ரூ.800 கோடி செலவில் கடந்த 2 மாதங்களாக இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் செய்து இருக்கிறது. இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 47 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், அவர்களின் ஆயுதங்கள், தளவாடங்கள், கண்டுபிடிப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியை முறைப் படி தொடங்கி வைத்து பார்வையிடுதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனி விமானம் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் கே.பழனிசாமி, பாஜக பிரமுகர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.


பின்னர் 9.25 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் சென்று, அங்கிருந்து கார் மூலம் ராணுவக் கண்காட்சி நடக்கும் திருவிடந்தைக்கு 9.50 மணிக்கு பிரதமர் சென்றார்.

திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

‘‘பாதுகாப்பு துறைக்கான தளவாடங்களை தயாரிக்கும் உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக, பாதுகாப்பு துறையில் ஆயுதக் கொள்முதல் நடைமுறையில் பல குறிப்பிட்ட விதிகளில் மத்தியில் ஆளும்பாஜக அரசு திருத்தம் கொண்டு வந்திருக்கிறது.

நாட்டு மக்களுக்கு அமைதியையும், எல்லையில் பாதுகாப்பையும் உறுதி செய்வது என்பது அரசின் கடமையாகும். இதற்காக நம்முடைய பாதுகாப்பு, ராணுவத்தின் மேம்படுத்த தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்கிறோம். குறிப்பாக, உள்நாட்டில் ராணுவத்தளவாடங்களை தாயாரிக்கும் துறையை மேம்படுத்த இருக்கிறோம்.

கடந்த 2014ம் ஆண்டு மே மாதத்தில் பாதுகாப்பு துறையில் 118 பொருட்களுக்கு ஏற்றுமதி அனுமதி தரப்பட்டு இருந்தது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3642 கோடியாகும். ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து 794 பொருட்களுக்கு ஏற்றுமதி அனுமதி அளித்துள்ளோம். இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8500 கோடியாகும்.

கடந்த கால ஆட்சியில், முறையான கொள்கைகள் வகுக்கப்படாத காரணத்தால், பாதுகாப்பு துறையில் முக்கிய சிக்கல்கள் இருந்தன. இதுபோன்ற காலதாமதம்,சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய திறமையின்மை, பல்வேறு உள்நோக்கங்கள் இருப்பதை கண்டறிந்தோம்.

இவை நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து அதை நீக்க நடவடிக்கை எடுத்தோம். அதுபோன்ற குறைகள் இருக்க இப்போது, எதுவும் இல்லை, மீண்டும் ஒருபோதும் நடக்காது’  இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மக்களுக்கு அமைதியையும், எல்லையில் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை: பிரதமர் மோடி ,Narendra Modi: Latest News, Photos, Videos on Narendra Modi .. மக்களுக்கு அமைதியையும், எல்லையில் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை: பிரதமர் மோடி ,Narendra Modi: Latest News, Photos, Videos on Narendra Modi .. மக்களுக்கு அமைதியையும், எல்லையில் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை: பிரதமர் மோடி ,Narendra Modi: Latest News, Photos, Videos on Narendra Modi ..
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in