tamilkurinji logo
 

மணமகனை துப்பாக்கி முனையில் மிரட்டி தாலி கட்ட வைத்த பெண் வீட்டார் ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

மணமகனை துப்பாக்கி முனையில் மிரட்டி தாலி கட்ட வைத்த பெண் வீட்டார்

First Published : Monday , 8th January 2018 11:35:39 AM
Last Updated : Monday , 8th January 2018 11:35:39 AM


மணமகனை துப்பாக்கி முனையில் மிரட்டி தாலி கட்ட வைத்த பெண் வீட்டார் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


‘‘மண்டபத்துக்கு இழுத்துச் சென்று துப்பாக்கி முனையில் தாலி கட்ட சொன்னதை, போலீஸார் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்’’ என்று பிஹார் இன்ஜினீயர் புகார் தெரிவித்துள்ளார்.

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் (29), இன்ஜினீயர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பொதுத் துறை நிறுவனம் பொகாரோ ஸ்டீல் நிறுவனத்தில் இளநிலை மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த மாதம் இவரை சிலர் கடத்தி சென்று துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணுக்குத் தாலி கட்ட வைத்துள்ளனர். இதுகுறித்து வினோத் குமார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாட்னாவில் எனது நண்பர் திருமணம் கடந்த மாதம் நடந்தது. அதில் பங்கேற்க பொகாரோவில் இருந்து வந்தேன். அப்போது எனக்கு தெரிந்த ஒருவர், என்னை வாகனத்தில் மண்டபத்துக்கு அழைத்துச் செல்வதாக கூறினார்.

அவருடைய வாகனத்தில் சென்றேன். ஆனால், என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு ஏதோ பொருள் எடுக்க வேண்டும் என்று கூறினார். அதை நம்பி சென்றேன்.

அங்கு சென்ற பிறகு ஒரு அறையில் என்னை அடைத்து வைத்தார். அங்கு எனக்கு மணமகன் உடை கொடுத்து அணிந்து கொள்ள கட்டாயப்படுத்தினர்.

 நான் முடியாது என்று கூறியபோது அடித்து துன்புறுத்தினர். அப்போது மணப்பெண்ணின் சகோதரர் சுரேந்தர் யாதவ் என்பவர் வந்தார்.

‘என் சகோதரியைத் திருமணம் செய்து கொள். இல்லாவிட்டால் கொன்று விடுவேன்’ என்று மிரட்டி சென்றார்.

பின்னர் அங்கிருந்து மண்டபத்துக்கு வலுக்கட்டாயமாக என்னை இழுத்துச் சென்றார்கள். அங்கு திருமண சடங்குகளை செய்ய சொல்லி அடித்தனர்.

அங்கு மணப்பெண் அலங்காரத்தில் இருந்த பெண்ணுக்கு குங்குமம் வைக்கச் சொல்லி அடித்தார்கள். என் தலையில் துப்பாக்கி வைத்து தாலி கட்ட சொன்னார்கள்.

நான் முடியாது என்று அழுதேன், கெஞ்சினேன். ‘உங்களுக்குத் திருமணம்தான் செய்து வைக்கிறோம். தூக்கில் போடவில்லை’ என்று கூறினார்கள்.

திருமணம் முடிந்த பின்னர் ஒரு அறைக்கு அழைத்து சென்றார்கள். அங்கும் துப்பாக்கியுடன் சிலர் காவலுக்கு இருந்தார்கள். என்னால் தப்பிக்க முடியவில்லை.

மறுநாள் காலை சுரேந்தர் யாதவின் மைத்துனர் வந்து, ‘‘நடந்தது நடந்துவிட்டது. பெண்ணை ஏற்றுக் கொள்ளுங்கள்’’ என்று சமாதானப்படுத்தினார்.

அவருடைய போனில் இருந்து என் வீட்டாருக்கும் நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்தேன்.

உடனடியாக பண்டாரக் போலீஸ் நிலையத்தில் என் சகோதரர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். ஆனால், ‘உங்கள் சகோதரரை கடத்தவில்லை. திருமணம்தான் நடந்துள்ளது.

பெண்ணை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று போலீஸார் கூறியுள்ளனர். பெண் வீட்டாரிடம் லஞ்சம் வாங்கி கொண்டு போலீஸார் அவர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று 3 முறை போலீஸார் வந்தனர். என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறினேன். ஆனால், திருமணத்தை ஒப்புக் கொள் என்று கூறிவிட்டு சென்றனர்.

எனது நண்பர்கள் ஊடகங்களைத் தொடர்பு கொண்டு எனக்கு நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளனர்.

அதன்பிறகு, பெண்ணையும் என்னுடன் அழைத்து செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

சம்பவம் நடந்து இத்தனை நாட்களான பின்னரும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.  இவ்வாறு வினோத் குமார் கூறினார்.


மணமகனை துப்பாக்கி முனையில் மிரட்டி தாலி கட்ட வைத்த பெண் வீட்டார் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
மணமகனை துப்பாக்கி முனையில் மிரட்டி தாலி கட்ட வைத்த பெண் வீட்டார் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
மணமகனை துப்பாக்கி முனையில் மிரட்டி தாலி கட்ட வைத்த பெண் வீட்டார் ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 3 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற போலீஸ் ஏட்டு கைது
 புனே அருகே போலீஸ் ஏட்டு 3 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் தாவந்தில் மாநில ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர், சஞ்சய்

மேலும்...

 இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு
இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்வேறு ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றி அந்த அனுபவத்தின் அடிப்படையில் கொலீஜியம் மூலம் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்பர்.இந்நிலையில் முதன்முறையாக பெண் மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா,61 சுப்ரீம் கோர்ட்

மேலும்...

 தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி குடியரசு தலைவருக்கு மனு கொடுத்த தம்பதி
தெற்கு மும்பையில் சார்னி சாலையில் வசித்து வரும் தம்பதி நாராயண் லவாடே (வயது 88) மற்றும் அவரது மனைவி ஐராவதி (வயது 78).  லவாடே மகாராஷ்டிர மாநில போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  அவரது மனைவி பள்ளியில் முதல்வராக பணியாற்றி

மேலும்...

 ஓட்டு கேட்டு வந்த பா.ஜ.க. வேட்பாளருக்கு செருப்பு மாலை போட்ட முதியவர்
 மத்திய பிரதேச மாநிலத்தில் சில உள்ளாட்சி அமைப்பு பதவி இடங்கள் காலியாக உள்ளன.அந்த இடங்களுக்கு வருகிற 17-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அந்த உள்ளாட்சி இடங்களில் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.தகர் மாவட்டம் தாமோத் என்னும் இடத்தில் காலியாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in