மதுரையில் போலீஸ் என்கவுன்டரில் ரவுடிகள் சுட்டுக்கொலை

மதுரையில் போலீஸ் என்கவுன்டரில் ரவுடிகள் சுட்டுக்கொலை
மதுரையில் சிக்கந்தர் சாவடிப் பகுதியில் நடந்த போலீஸ் சோதனையின் போது போலீசாரை தாக்கிய ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மதுரையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிக்கந்தர் சாவடிப் பகுதியில்  மாநகர காவல்துறை தனிப்படை போலீசார் ரவுடிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது  சில ரவுடிகள் தப்பி ஓடி உள்ளனர். சில ரவுடிகள் போலீசாரை தாக்கி உள்ளனர். போலீசார் அவர்களை நோக்கி  துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.


இதில் ரவுடிகள்  மந்திரி (எ) இருளாண்டி,  சகுனி கார்த்திக் ஆகியோர் பலியாகி உள்ளதாக முதல் கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.

எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் ரவுடிகளை பிடிக்கச் சென்ற போது மோதல் ஏற்பட்டதால்,  இருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர் என காவல் துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

என்கவுண்டர் நடத்தியது மதுரை செல்லூர் போலீசார்.  ரவுடிகள் தாக்கியதில் போலீஸ் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, குற்றவாளிகளிடமிருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
https://goo.gl/HVyJ9H






18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்