tamilkurinji logo
 
மதுரை அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்

செய்திகள் >>> தமிழகம்

மதுரை அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

First Published : Sunday , 13th August 2017 07:25:00 PM
Last Updated : Sunday , 13th August 2017 07:25:00 PM

மதுரை அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது பதினெட்டாம் கோட்டை கிராமம். இந்த ஊரை சேர்ந்த ராமன் மனைவி பாப்பாத்தியம்மாள் (வயது 65). இவரது மகன்கள் பிச்சை (40), சத்தியநாதன் (35).

இதில் பிச்சை வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவரது மனைவி வனிதா (35). சத்தியநாதனுக்கு திருமணம் ஆகவில்லை. மாற்றுத்திறனாளி. விவசாய குடும்பத்தை சேர்ந்த அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இவர்களது வீட்டை சுற்றிலும் இரும்பு வலையால் ஆன வேலி போடப்பட்டு இருந்தது. மானாமதுரை பகுதியல் நேற்று இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. இதில் வீட்டின் மேல் பகுதியில் தாழ்வாக சென்ற மின்சார வயர் அறுந்து வேலி மீது விழுந்தது.

இன்று அதிகாலை வனிதா வீட்டு வாசல் கதவை திறந்து வேலி அருகில் சென்றார். அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பதை கவனிக்கவில்லை. வேலியை தொட்ட வனிதா மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.

இதில் அவர் அலறியபடி சம்பவ இடத்திலேயே பலியானார். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த மாமியார் பாப்பத்தியம்மாளும், மைத்துனர் சத்தியநாதனும் ஓடிவந்தனர். அவர்கள் வனிதா இறந்து கிடந்தது தெரியாமல் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது இரு வரையும் மின்சாரம் தாக்கியது. தொடர்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மானாமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலியானது, பதினெட்டாம் கோட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
மதுரை அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
மதுரை அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 sample test
sample test

மேலும்...

 இரட்டை குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
கோவையை அடுத்த சூலூர் காடம்பாடியை சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 26). பொக்லைன் ஆபரேட்டர்.இவரது மனைவி பாண்டியராணி(24). இவர்களுக்கு 2½ வயதில் ராமன், லட்சுமணன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பாண்டியராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு

மேலும்...

 மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை
சென்னை நெற்குன்றம், செல்லியம்மன் நகர், ஆடி வீதியை சேர்ந்தவர் ஆதிகேசவன் (48), ஆட்டோ டிரைவர்.  இவரது மனைவி மோகனா (40). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகள் கவுசல்யா (20), மகன்

மேலும்...

 காதலனுடன் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா

மேலும்...

பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in