மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம்
 மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.

 பஞ்சாப் நேசனல் வங்கி முறைகேடு, காவிரி விவகாரம், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை விவாதிக்க மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் அவை நேரம் வீணடிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. சார்பில் வருகிற 12ம் தேதி நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற முடக்கத்தை கண்டித்து நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்த பொதுக்கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் 29ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட், மத்தியில் ஆட்சிக்கு வருமுன் நாட்டு மக்களுக்கு பா.ஜனதா கட்சி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கியது.

ஆனால் இதில் பெரும்பாலான திட்டங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை. மாறாக பயம், வெறுப்பு, வன்முறை போன்ற ஒரு சூழல்தான் நாடு முழுவதும் நிலவுகிறது. ஒரே செயல்திட்டத்தை பா.ஜனதா ஒருபோதும் பின்பற்றியதில்லை.

மாறாக சூழ்நிலைக்கு ஏற்ப தங்களின் செயல்திட்டங்களை மாற்றி வருகிறது என்று கூறியுள்ளார். இத்தகைய தவறான நிர்வாகத்தை மக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கில் காங்கிரஸ் சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் 29ம் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

 இதில் நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் இன்று டெல்லி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி தலைமை ஏற்கிறார்.

இந்த போராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவா்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
https://goo.gl/iMjnHK


27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்