மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்

மனஅழுத்தத்தை விரட்டி  எப்போதும் சந்தோஷமாக இருக்க  சில டிப்ஸ்
எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சந்தோஷத்தை எப்படி ஏற்படுத்தி கொள்வது என்பதைத் தான் நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால் தான்  நமக்குள்ளேயே இருக்கிற சந்தோஷத்தை வெளியே தேடிக்கொண்டிருக்கிறோம்

எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மனஅழுத்தம், மன உளைச்சல் மற்றும் மன இறுக்கம் போன்றவை ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், சிரித்துக் கொண்டு ரிலாக்ஸ் ஆக இருந்தால், மன அழுத்தம் வருவதைத் தடுக்கலாம்.

மகிழ்ச்சியான மனம் எப்பொழுதும் நல்ல சிந்தனையை கொடுக்கும். நாம் எப்பொழுதும் சந்தோஷமான மனநிலையுடன் வாழ வேண்டும்; கவலையை தவிர்க்க வேண்டும். துன்பத்தை கண்டு பயப்டக் கூடாது. மனித வாழ்க்கையில் இன்ப, துன்பம் இரண்டும் உண்டு; இவைகளை நாம் சரி சமமாக பாவிக்க வேண்டும்.

வாழ்க்கை குறிக்கோளை அடிப்படையாக கொண்டது. குறிக்கோளை அடைய பல இன்னல்களையும், சிரமங்களையும் சந்திக்க வேண்டி வரும்; மன உளைச்சலை ஏற்படுத்தும். இது தவிர்க்க முடியாதது. இதை எவ்வாறு கையாள்கிறோம் என்பதுதான் முக்கியம். இம்மன உளைச்சலை பக்குவமாக கையாள வேண்டும்.

இதை,பிரச்னையாக பார்க்கும் போது பல இன்னல்கள் ஏற் பட்டு, மன நோயினை கொடுக்கிறது. மனநோய்தான் பல உடல் வியாதிகளுக்கு முக்கிய காரணம் நம்மிடையே ஏற்படும் பிரச்னைகளுக்கும் இதுவே காரணம். இதனை மாற்ற, நாம் குழந்தைகளைப் போல மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.


எதைப் பற்றியும் எப்போதும் யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். அதிலும் முக்கியமாக நாளை என்ன நடக்கும் என்பதைப் பற்றி நினைத்து கவலைப்படக்கூடாது. இவ்வாறு யோசித்தால், இரவில் நிம்மதியான தூக்கம் ஏற்படாமல், உடலும் மனமும் பாதிக்கப்படும். ஆகவே எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். வேலை இல்லாத நேரத்தில் மனதிற்கு அமைதியைத் தரும் பாடல்கள் அல்லது பிடித்த பாடல்களை கேளுங்கள்.

உங்கள் பொறுப்புகளை உங்களால் இயன்றவரை சிறப்பாக செய்ய முயற்சி செய்யுங்கள். அடுத்தவர்களுக்கு முடிந்தவரை உதவியும் உபாகாரமும் செய்யுங்கள். அனால் "நன்றி" என்ற குறைந்தபட்ச பிரதியுபகாரத்தையும் எதிர்பார்க்காதீர்கள்.

மனம் கஷ்டமாக இருக்கும் போது, பிராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியை செய்தால், மன இறுக்கம் குறையும். இல்லையென்றால் கடினமான உடற்பயிற்சி அல்லது வேகமாக நடப்பது போன்றவற்றையும் செய்யலாம். அதனால் உடலுக்கு மட்டும் ஆரோக்கியமானதல்ல, மனதிற்கும் தான். நமது  கடமையை சரியாக புரிந்து செய்தால் எந்த பிரச்னையும் வராது. கடமையை சரியாக செய்தால், மற்றவர்களுடன் நல்லுறவு நீடிக்கும்.

தன் மனதில் இருக்கும் பிரச்சனை மற்றும் கஷ்டத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 உங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை உங்கள் உயிர் தோழனிடம் மனம் விட்டு பேசிப்பாருங்கள், அப்போது உங்களுக்கே மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்துப் போல் இருக்கும். மனம் குதூகலத்துடன் காணப்படும்

நல்ல உறவு இருந்தால் பகிர்வு இருக்கும். நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் "நம்மால் முடியும்' எனும் மனப்பக்குவத்தினை கொண்டு வந்தால், அன்றைய தினம் நமக்கு வெற்றியான தினமாகும். நாள்தோறும் இறைவனை வணங்கவேண்டும். இயற்கையின் படைப்புகளை ரசிக்கவேண்டும்; மனதுக்கு ஆறுதல் தரும். மகிழ்ச்சி மற்றும் நல் ஆரோக்கியத்தை கொடுக்கும். ஓய்வு நேரங்களில் மகிழ்ச்சியுடன் இருந்தால், மனப்பிரச்னை ஏற்படாது

https://goo.gl/iHqara


21 Aug 2014

பணிவோம், உயர்வோம்!

19 Jun 2014

மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்

23 Mar 2014

திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்

15 Mar 2014

முதுமை பற்றிய பொன் மொழிகள்

09 Mar 2014

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

09 Mar 2014

பொன் மொழிகள்

23 Jan 2014

விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?

15 Dec 2013

முதுமையின் பொன் மொழிகள்

19 Nov 2013

யோகாசனம்( yogasana )

29 Oct 2013

தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!