மனைவிக்கு ரூ.2969 கோடி ஜீவனாம்சம் வழங்கும் கோடீஸ்வரர்

மனைவிக்கு ரூ.2969 கோடி ஜீவனாம்சம் வழங்கும் கோடீஸ்வரர்
இங்கிலாந்து  நாட்டை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் ரிச்சார்ட் கேரிங்(68). லண்டனில் உள்ள பல ஆடம்பர ஓட்டல்களுக்கு இவர் தான் சொந்தக்காரர்.ஓட்டல்கள் மட்டுமின்றி அழகு சாதனங்களை தாயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வரும் ரிச்சார்ட்டின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு 700 மில்லியன் பவுண்ட் ஆகும்.

45 ஆண்டுகளுக்கு முன்னர் ஜாக்குயி(67) என்ற பெண்ணை ரிச்சார்ட் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்

அண்மைக்காலமாக இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் மனைவியை ரிச்சார்ட் விவாகரத்து செய்துள்ளார்.

விவாகரத்திற்கு முன்னதாகவே பிரேசில் நாட்டை சேர்ந்த 35 வயதானபட்ரிகா மொண்டினி  என்று பெண்ணுடன் ரிச்சார்ட்டிற்கு உறவு இருந்துள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது

ரிச்சார்ட் தனது மனைவியான ஜாக்குயியை விவாகரத்து செய்ததை தொடர்ந்து, தனது இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து தற்போது வசித்து வருகிறார்.

முதல் மனைவிக்கு விவாகரத்து வழங்கியுள்ளதால் அவருக்கு ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பான வழக்கில் தற்போது ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் மனைவிக்கு ரிச்சார்ட் 350 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.2968,63,085,05 ) ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், இங்கிலாந்து நாட்டிலேயே ஒருவர் அதிகளவில் ஜீவனாம்சம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/nX5P1a


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே