tamilkurinji logo


 

மனைவியை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம்,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

மனைவியை கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம்

First Published : Thursday , 13th September 2018 08:17:32 PM
Last Updated : Thursday , 13th September 2018 09:45:08 PM


மனைவியை கொலை செய்ததாக  கணவர் வாக்குமூலம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி உமாராணி(41). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி காலை வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலில் பிணமாக கிடந்தார்.


அப்போது அங்கு வந்த உமாராணியின் அண்ணன் உமாசங்கர், தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக குமராட்சி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, இறுதிசடங்கை தடுத்து நிறுத்தி உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சந்தேக மரணம் என்று கூறி வழக்குப்பதிவு செய்தனர்.

பிரேத பரிசோதனையில் உமாராணியின் தலையில் காயம் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் அவரை யாரோ அடித்து கொலை செய்து இருக்கிறார்கள் என்பதை போலீசார் உறுதிசெய்தனர். தொடர்ந்து இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் செல்வராஜ் மேலவன்னியூர் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனிடம் சரணடைந்தார். அப்போது அவர், தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பின்னர், அவர் குமராட்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து செல்வராஜை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது செல்வராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த நான், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். தொடர்ந்து எனக்கும், எனது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் உமாராணி, விவாகரத்து கேட்டு விருத்தாசலம் கோர்ட்டில் மனு செய்தார். அதில் எங்களிடம் சமரசம் செய்து குடும்பம் நடத்த அறிவுறுத்தினர். இதேபோல் குமராட்சி போலீஸ் நிலையத்திலும் குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கு உள்ளது.

உமாராணி பெயரில் உள்ள சொத்துகளை எனது பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு கூறினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்தேன்.

விவசாய நிலத்தில் நின்று கொண்டிருந்த உமாராணியின் தலையில் கத்தியால் குத்தினேன். பின்னர் அவரை வாய்க்காலில் தள்ளிவிட்டு கொலை செய்தேன். பின்னர் எதுவும் தெரியாததுபோல் நாடகமாடினேன். இருப்பினும் போலீசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டதை அறிந்து, கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மனைவியை கொலை செய்ததாக  கணவர் வாக்குமூலம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மனைவியை கொலை செய்ததாக  கணவர் வாக்குமூலம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மனைவியை கொலை செய்ததாக  கணவர் வாக்குமூலம்,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வட தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில்

மேலும்...

 பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை

மேலும்...

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே பரவலாக லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அடுத்து வரும் தினங்களிலும் வட

மேலும்...

 நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்
நிலக்கரி பற்றாக்குறையால் தமிழகத்தில் மின்வெட்டு நீடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறைக்கு தமிழக அரசின் கமிஷன் பெறும் உள்நோக்கம் காரணமாக இருக்கலாம் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in