மனைவி, 5 வயது மகனை பொருட்படுத்தாமல் என்கவுண்டரில் பலியான லஷ்கர் தீவிரவாதி

மனைவி, 5 வயது மகனை பொருட்படுத்தாமல் என்கவுண்டரில் பலியான லஷ்கர் தீவிரவாதி
ஸ்ரீநகர் அருகே வீடு ஒன்றில் பதுங்கியிருந்த லஷ்கர் தீவிரவாதியைச் சரணடையச் செய்ய அவரது மனைவி மற்றும் மகனை அவ்விடம் வரவழைத்து புதிய முயற்சியை ஜம்மு-காஷ்மீர் போலீஸ் முயற்சி செய்தனர், ஆனால் பலனளிக்கவில்லை.

மொகமது ஷஃபி ஷெர்கோஜ்ரி என்ற பந்திபோராவைச் சேர்ந்த 32 வயது லஷ்கர் தீவிரவாதி மற்றும் இன்னொரு லஷ்கர் தீவிரவாதி அவந்திபுராவில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்தனர், அந்த விட்டை போலீசார் சுற்றி வளைத்தனர்.ஸ்ரீநகரிலிருந்து 35 கிமீ தொலைவில் இந்த வீடு இருந்தது. வீட்டை பாதுகாப்புப் படையினர் முற்றிலும் சுற்றி வளைத்தனர்.

இருவரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கண்ட தெற்கு காஷ்மீரின் மூத்த போலீஸ் அதிகாரிகள் இருவரது குடும்பத்தினரும் எங்கு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க விழைந்தனர்.

இரண்டு தீவிரவாதிகளிடத்திலும் தெற்கு காஷ்மீர் உதவித் தலைமை ஆய்வாளர் எஸ்.பானி மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர் ஜாகித் மாலிக் ஆகியோர் வெளியே வருமாறும் சரணடையுமாறும் முறையீடு செய்தனர்.


 இதற்கிடையே பந்திபோரில் உள்ள காக்போராவுக்கு போலீஸ் குழு ஒன்றை அனுப்பி குடும்பத்தினரை அழைத்து வர முயற்சி மேற்கொண்டனர்.


இன்னொரு போலீஸ் குழு புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோயெல் என்ற ஊருக்கு விரைந்து இன்னொரு தீவிரவாதியின் பெற்றோரை அழைத்து வரச் சென்றனர். வீட்டில் பதுங்கியிருந்த 25 வயது ஜஹாங்கீர் அமகது கனி என்பவரது பெற்றோரைத்தான் போலீஸ் அழைத்து வரச் சென்றது.

ஷெர்கோஜ்ரி மற்றும் கனி ஆகிய இரண்டு தீவிரவாதிகளும் ‘ஏ’ கிளாஸ் தீவிரவாதிகள், தடை செய்யப்பட்ட லஷ்கர் தீவிரவாதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தீவிரவாதி ஷெர்கோஜ்ரியின் மனைவி அக்தரா பேகம் என்கவுண்டர் தளத்துக்கு தனது 5-வது மகனுடன் வந்தார், அவர், தன் கணவனிடம், “வெளியே வாருங்கள், உங்கள் மகனை தூக்கிக் கொள்ளுங்கள்” என்றார், சிறுவனின் பலத்த அழுகைக்கிடையே.

போலீஸ் அதிகாரிகளும் குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியே வாருங்கள், நியாயமான விசாரணை நடக்கும் என்றும் மனித நேயத்துடன் நடத்தப்படுவீர்கள் என்றும் எவ்வளவோ எடுத்துக் கூறிப்பார்த்தனர்.

ஆனால் அனைத்து முறையீடுகளுக்கும் அந்தத் தீவிரவாதிகள் அசைந்து கொடுக்கவில்லை. கடைசியில் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர், இதில் இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
https://goo.gl/zr2AQb


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே