tamilkurinji logo
 

மனைவி இறுதி சடங்கில் உயிரை விட்ட கணவர்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,newsசெய்திகள் >>> தமிழகம்

மனைவி இறுதி சடங்கில் உயிரை விட்ட கணவர்

First Published : Tuesday , 23rd January 2018 07:17:56 PM
Last Updated : Tuesday , 23rd January 2018 07:21:06 PM


மனைவி இறுதி சடங்கில் உயிரை விட்ட கணவர்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்கா குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 75). இவரது மனைவி பார்வதி (74).

 இவர்களுக்கு இந்திராணி (45) என்ற மகளும், பன்னீர் (40) என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து ஈரோட்டில் வசித்து வருகிறார். மகன் குன்னூர் மார்க்கெட் கடையில் வேலை செய்து வருகிறார்.

முதியவர் பொன்னுசாமியும் அவரது மனைவி பார்வதியும் தோட்டக்கலை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

கடந்த சில நாட்களாக பார்வதிக்கு உடல்நலம் பாதிக் கப்பட்டது. சிகிச்சைக்காக மனைவியை பல ஆஸ்பத்திரிக்கு பொன்னுசாமி அழைத்துச்சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவரது வீட்டில் இறந்தார்.

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் பொன்னுசாமி கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். இருந்தாலும் அவர் அதிர்ச்சியிலேயே இருந்தார்.

உடலை அடக்கம் செய்ய இறுதி சடங்கு நடந்தது. அப்போது பொன்னுசாமி மனைவியின் உடல் அருகே வந்து அமர்ந்தார். மனைவியின் உடலை பார்த்து மீண்டும் கதறி அழுதார்.

பின்னர் திடீரென நெஞ்சை பிடித்தவாறு மயங்கி விழுந்து அவரும் உயிரிழந்தார். மனைவியின் இறுதி சடங்கில் கணவர் இறந்த சம்பவம் உறவினர்கள், நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகத்தான் செல்வார்கள்.

சத்தம்போட்டு கூட பேசமாட்டார்கள். மிகவும் மென்மையாக பழகக்கூடியவர்கள்.

மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதில் இருந்தே பொன்னுசாமி சோகத்தில் இருந்தார்.

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் இறுதி சடங்கின்போது கணவரும் இறந்து விட்டார். சாவிலும் இணைய பிரியாமல் சென்று விட்டனர் என்று கண்கலங்கியவாறு கூறினர்.


பின்னர் இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

மனைவி இறுதி சடங்கில் உயிரை விட்ட கணவர்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மனைவி இறுதி சடங்கில் உயிரை விட்ட கணவர்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மனைவி இறுதி சடங்கில் உயிரை விட்ட கணவர்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மனைவியை அடித்து கொன்று நாடகமாடிய கணவன் கைது
கள்ளக்காதல் விவகாரத்தால் முன்னுக்குப்பின் முரணாகப்பேசிய மனைவியை அடித்துக்கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அடுத்த பாலூர் பழைய சீவரத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி மோனிகா (32). இருவரும் பெரும்புதூரில் உள்ள

மேலும்...

 சென்னையில் இரண்டு இடங்களில் வீட்டில் புகுந்து கத்திமுனையில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை
சென்னையின் இரண்டு வெவ்வேறு இடங்களில் வீட்டில் தனியாக இருந்த பெண்களை வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.சென்னை பாதுகாப்பற்ற நகரமாகி வருகிறதா என்ற கேள்வி அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன.

மேலும்...

 தமிழக வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை - ஸ்டாலின்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும்,

மேலும்...

 நிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு
பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46)

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in