மனைவி சமையல் சரியில்லை என விவாகரத்து கேட்ட கணவர்

மனைவி சமையல் சரியில்லை  என  விவாகரத்து கேட்ட கணவர்
மனைவி காலையில் தாமதமாக எழுந்திருப்பதாகவும், சுவையாக சமைப்பதில்லை என்று கூறியும் விவகாரத்து கேட்டவரின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

மும்பையின் சாந்தாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மனைவியிடமிருந்து  விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் காலையில் விரைவாக எழுப்ப முயன்றால், தன்னையும் தனது பெற்றோரையும் மனைவி வசைபாடுவதாகவும், மாலையில் 6 மணிக்கு வேலைமுடிந்து வந்து தூங்குவதாகவும் இரவு 8.30 மணிக்குத்தான் இரவு உணவை தயாரிப்பதாகவும் புகார் மனுவில் கணவர் குற்றம்சாட்டியிருந்தார்.

சுவையாகவும் போதிய அளவிலும் மனைவி உணவு தயாரிப்பதில்லை என்றும், தாம் வேலைமுடிந்து தாமதமாக வந்தால் தனக்கு ஒரு டம்ளர் தண்ணீர்கூட தருவதில்லை என்றும் கணவர் புகார் கூறியிருந்தார்.


தாமதமாக எழுந்திருப்பது, சுவையாக உணவு சமைப்பதில்லை என்பதெல்லாம் சட்டத்தின் பார்வையில் கொடுமைப்படுத்துவது அல்ல என்று கூறி கணவரின் மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


https://goo.gl/baHxXe


18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

10 Dec 2018

நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்

16 Oct 2018

நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

11 Oct 2018

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

10 Oct 2018

சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்