tamilkurinji logo
 

மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்

First Published : Thursday , 21st September 2017 09:01:28 AM
Last Updated : Thursday , 21st September 2017 09:01:28 AM


மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கரம் விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று புனித நீராடினார்.

மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் கடந்த 12-ம் தேதி தொடங்கிய மகா புஷ்கரம் விழா வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, இங்கு ரூ.2 கோடி மதிப்பில் புதிதாக நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. அதில், ஆழ்குழாய் மூலம் நீர் நிரப்பப்பட்டு, பல லட்சம் பேர் புனித நீராடிச் சென்றுள்ளனர்,

   புனித நீராடிய பிறகு பொதுமக்களை வணங்கும் முதல்வர் பழனிசாமி.

 இந்நிலையில், மகா புஷ்கரம் விழாவுக்காக மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட நீர், நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை துலாக் கட்டத்தை வந்தடைந்தது. அதில் அடித்துவரப்பட்ட குப்பைகள், தூசிகளை பொதுப்பணித் துறையினர் மயிலாடுதுறைக்கு முன்னதாக வலைகள், தடுப்புகள் அமைத்து அகற்றினர். இதனால், துலாக் கட்டத்துக்கு தூய்மையான நீர் வந்து சேர்ந்தது.

நாகையில் நடைபெறும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க புறப்பட்ட முதல்வர் பழனிசாமி மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியின் வடகரைக்கு புனித நீராட நேற்று வந்தார்.


மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் புனித நீராடிய சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால்   -  படம்: ஏ.முரளிதரன்

 
கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த முதல்வர், பின்னர் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஓ.எஸ்.மணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ் ஆகியோருடன் துலாக் கட்டத்துக்கு வந்த புதிய நீரில் புனித நீராடினார். தொடர்ந்து, கரையில் உடை மாற்றுவதற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த அறையில் உடை மாற்றிக்கொண்ட அவர், கரையில் உள்ள தெய்வங்களை வணங்கினார்.

மகா புஷ்கரம் விழாவையொட்டி, துலாக் கட்டத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோரும் புனித நீராடினர்.


மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதலனுடன் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா

மேலும்...

 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை
தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.இதுதொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக

மேலும்...

 சசிகலா நீக்கம் வலிமையான நடவடிக்கை - நடிகர் கமல்ஹாசன்
பிரபல இணையதளம் ஒன்றிற்கு  அளித்துள்ள சிறப்பு பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் கூறி இருப்பதாவது:-சமீபத்தில் கேரள முதல்வரை சந்தித்தேன். அதற்காக, நான் கம்யூனிஸ்டு கட்சியில் சேரப் போவதாக கூறினர். நான் பல்வேறு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால்

மேலும்...

 தொழிலாளி மகள் டாக்டராகக் கூடாதா - அனிதாவின் தந்தை சண்முகம் கதறல்
தொழிலாளியின் மகள் டாக்டராகக் கூடாதா எனக் கேட்டு கண்ணீர் விட்டுக் கதறிய அனிதாவின் தந்தை சண்முகத்தின் கதறல் அனைவரையுமே கலங்கச் செய்தது.மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு சிறுவயதிலிருந்தே அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்த அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in