tamilkurinji logo


 

மலேசியாவில் ரஜினி, கமல் சந்திக்கிறார்கள் அரசியலில் பரபரப்பு ,Rajinikanth and Kamal Haasan are keeping Tamil Nadu tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Rajinikanth,and,Kamal,Haasan,are,keeping,Tamil,Nadu,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




மலேசியாவில் ரஜினி, கமல் சந்திக்கிறார்கள் அரசியலில் பரபரப்பு

First Published : Thursday , 4th January 2018 12:07:37 PM
Last Updated : Thursday , 4th January 2018 12:07:37 PM


மலேசியாவில் ரஜினி, கமல் சந்திக்கிறார்கள் அரசியலில்  பரபரப்பு ,Rajinikanth and Kamal Haasan are keeping Tamil Nadu tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


தமிழ் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடக்கிறது.

தமிழ் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் நாளை மலேசியா செல்கிறார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

கலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை இங்கு அமைய உள்ளன.

இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். கட்டிட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் (6-ந்தேதி) இந்த விழா நடக்கிறது.

மலேசிய அரசுடன் இணைந்து தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை இந்த விழாவை நடத்துகிறது. இதில் நடிகர்-நடிகைகள் நடனம், நாடகம், பாடல், நகைச்சுவை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்க உள்ளன.

இந்த விழாவில் 340 நடிகர்-நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சங்க அறக்கட்டளையில் நடிகர் கமல்ஹாசன் உறுப்பினராக இருக்கிறார். அவரும் இந்த விழாவில் பங்கேற்கிறார்.

நடிகர் ரஜினிகாந்தும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இருவருக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) மலேசியா புறப்படும் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள் ஏற்கனவே மலேசியா சென்று விட்டனர். ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் மேலும் பல நடிகர்-நடிகைகளும் மலேசியா செல்கிறார்கள்.

மலேசிய கலைவிழாவில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒரே மேடையில் பேசுவார்கள் என்றும், அப்போது அரசியல் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் ரஜினி, கமல் சந்திக்கிறார்கள் அரசியலில்  பரபரப்பு ,Rajinikanth and Kamal Haasan are keeping Tamil Nadu tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
மலேசியாவில் ரஜினி, கமல் சந்திக்கிறார்கள் அரசியலில்  பரபரப்பு ,Rajinikanth and Kamal Haasan are keeping Tamil Nadu tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
மலேசியாவில் ரஜினி, கமல் சந்திக்கிறார்கள் அரசியலில்  பரபரப்பு ,Rajinikanth and Kamal Haasan are keeping Tamil Nadu tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல டிவி நடிகை நிலானி உருக்கம்
சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறி வெளியான வீடியோ

மேலும்...

 சீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி
'சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், லால், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான

மேலும்...

 இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் கட்சி

மேலும்...

 அரசியலுக்கு வரும் பெண்கள் அதிகரிக்க வேண்டும்: கமல்ஹாசன்
சுயசக்தி விருதுகள் என்ற பெண் தொழில்முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா மயிலாப்பூர் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் 11 பிரிவுகளில் 35 பெண்களுக்கு விருதுகளும், மேலும் 9 பெண்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமல்ஹாசன் விருதுகளை வழங்கினார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in