மாடியிலிருந்து குதித்து 10-ம் வகுப்பு மாணவிகள் இருவர் தற்கொலை

மாடியிலிருந்து குதித்து 10-ம் வகுப்பு மாணவிகள் இருவர் தற்கொலை
10-ம் வகுப்பு சிபிஎஸ்இ பிரிவில் படிக்கும் இரண்டு இளம் மாணவிகள் ஹைதராபாத்தின் சாரூநகர் உயர் மாடிக் குடியிருப்பின் 8-ம் மாடியிலிருந்து அடுத்தடுத்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிரவாணி கேல், பார்கவி படேல் என்று பலியான மாணவிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவருக்கும் வயது 15.

பைரமால்குடாவில் உள்ள அக்‌ஷரா இண்டெர்நேஷனல் பள்ளியில் இருவரும் 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ-யில் படித்து வந்தனர். இருவரும் 10-ம் வகுப்பு பரீட்சை எழுதி வந்தனர்.

தற்கொலைக்கான காரணம் பரீட்சை தோல்வி பயம் என்று கூறமுடியவில்லை, காரணம் இரு மாணவிகளும் படிப்பில் சூரப்புலிகள் என்று கூறப்படுகிறது.

ஸ்ரவாணியின் தந்தை ஒரு விஞ்ஞானி. ஸ்ரவாணி வியாழனன்று தன் தோழி பார்கவி வீட்டுக்கு சேர்ந்து படிக்கச் சென்றுள்ளார். பார்கவியின் தந்தை சாந்தி குமார் படேல் கட்டுமானத் தொழில் செய்பவர்.

என்ன நடந்தது என்று தெரியவில்லை, இருவரும் படித்துக் கொண்டிருந்தனர் அப்போது 8-ம் மாடியில் ஒருவரும் இல்லை. வியாழன் மாலை 6.30 மணியளவில் குடியிருப்பின் 8-ம் மாடி பால்கனியிலிருந்து அடுத்தடுத்து குதித்தனர்.

சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் இறந்தனர் என்று எல்.பி.நகர் சப் இன்ஸ்பெக்டர் வெமுலக்கோண்டா மது தெரிவித்தார்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் ஒருவரான ஸ்ரவானியின் தற்கொலைக் குறிப்பு போலீஸாரால் கைப்பற்றப்பட்டது, அதில், ‘டியர் மா, பா.. சாரி, ஐ மிஸ் யூ தேஜு (ஸ்ரவாணியின் அண்ணன்)” என்று மட்டும்தான் இருந்தது, இன்னொரு மாணவி தற்கொலைக் குறிப்பு எதையும் விட்டுச் செல்லவில்லை.

சந்தேகத்துக்கு இடமான மரணம் என்ற நோக்கில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது போலீஸ்.


இந்தத் தற்கொலைகளால் இருவீட்டார் குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர்.
https://goo.gl/fTqxSs


18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

10 Dec 2018

நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்

16 Oct 2018

நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

11 Oct 2018

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

10 Oct 2018

சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்