மாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்,Menopause: Symptoms, causes, and treatments Menopause: What is Menopause? Menopause Symptoms, Treatment mathavidai details in tamil mathavidai vara vaithiyam
மாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்
First Published : Tuesday , 20th February 2018 08:10:41 PM Last Updated : Tuesday , 20th February 2018 08:17:03 PM
உங்கள் மாதவிலக்கிற்கும் எடைக்கும் சம்பந்தம் உள்ளது. அதிக எடை முறையான மாதவிலக்கினை பாதிக்கும். ஆரோக்கியமான நார்சத்து மிகுந்த உணவினை உட்கொள்ளுங்கள். இது எடையை சீராய் வைக்கும். மலச்சிக்கலை நீக்கும். மாதவிலக்கு வலியின்றி இருக்கும்.
உங்கள் இடுப்பு பகுதி உறுதியாய் இருக்க உடற்பயிற்சி அவசியம்.
30 வயதிற்குள் குழந்தை பெறுவது ஆரோக்கியமானது.
பிறப்புறுப்புகளை கடின, கார சோப் கொண்டு சுத்தம் செய்யாதீர்கள்.
மாதவிடாய் நிற்கும் காலத்தில் பல பெண்கள் சில பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். இவர்களை இக்கால கட்டத்தில் தாவர உணவினை எடுத்துக் கொள்ளவும், சர்க்கரையினை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றது.
மாதவிலக்கு காலத்தில் வயிற்றை இழுத்து பிடித்து வலி, கால் வலி இவற்றினை அனுபவிப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று ஒமேகா, கால்ஷியம் இவற்றினை எடுத்துக் கொள்ளலாம்.
மாதவிலக்கு முறையற்று இருந்தால் முதலில் எடையினை கவனியுங்கள். அதிக மனஉளைச்சல் கூட காரணம் ஆகலாம். தைராய்டு பிரச்சனை இருக்கின்றதா என்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உடற்பயிற்சியினை அன்றாடம் செய்யுங்கள்.
சிலருக்கு மாதவிலக்கு சுற்றின் நடுவில் சிறு சிறு ரத்த திட்டுகள் ஏற்படலாம். பாலிப்ஸ் எனப்படும் கருப்பை வாய் இவற்றில் ஏற்படும் சதையின் அதிக வளர்ச்சி காரணமாக இருக்கலாம். மருத்துவர் இதனை பரிசோதித்து நீக்கி விடுவார்.
சிலருக்கு மாதவிலக்கிற்கு ஓரிரு நாட்கள் முன்பு ஒருவித மனசோர்வு, பயம், எரிச்சல், சக்தி இன்மை, அதிகம் எதனையாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஆகியவை ஏற்படலாம். அதிக பழங்கள், காய்கறிகள், நார்சத்து கூடிய உணவு இவை தீர்வு கொடுக்கும். அசைவ உணவினை தவிர்ப்பது நல்லது. முடியவில்லை என்றால் மிகவும் குறைத்து கொள்ளலாம்.
ஒரு பெண்ணுக்கு 40-55 வயதிற்குள் மாதவிடாய் நிற்கலாம். இது அவரது தாய், பரம்பரை மற்றும் வேறு சில காரணங்களைக் கொண்டு ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
இந்த கால கட்டத்தில் பெண்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம்.
வயிற்றினைச் சுற்றி எடை கூடுதல்
பிறப்புறுப்பு வறட்சி ஆகலாம்.
சிறுநீர் பாதை, சிறுநீர் பையில் கிருமி தாக்குதல்
கவனக்குறைவு ஆகியவை ஏற்படலாம்.
இக்கால கட்டத்தில் பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி இதனை தவிர்ப்பதில் முக்கிய பங்கு பெறுகின்றது..
பதட்டம் பல விதங்களில் ஒருவரிடம் வெளிப்படும். கை, கால் நடுங்கும். சிலருக்கு நெஞ்சு பிடிப்பு போல இருக்கும் என பலவற்றினை கூறலாம்.
பதட்டம் என்பது ஒருவகை பயம். நிம்மதி இன்மை, ஏதோ இல்லாத ஒன்று இருப்பதாக நடந்து விடப்போவதாக நினைக்கும் பயம்.
ஆனால் இந்த பதட்டம் மனிதனை மிகவும் பாதிக்கின்றது என்பதால் இதிலிருந்து வெளிவருவதனை செயல்படுத்த வேண்டும்.
பலருக்கு எப்பொழுதும் ஒரு பீதி இருக்கும். தான் வேலை செய்யும் இடத்தில், பலர் இருக்கும் கூட்டத்தில் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற தேவையில்லாத பீதி இருக்கும். அதிகம் வியர்க்கும், நெஞ்சு படபடக்கும்.
சிலருக்கு இரவில் தூக்கமே வராது. அதிக சோர்வு இருக்கும். ஆனால் தூக்கம் வராது. இதற்கு காரணம் மனஉளைச்சலால், மூளை இரவில் ஓய்வு எடுப்பதில்லை.
சிலருக்கு அன்றாட சாதாரண வேலைகள் செய்வதே மூச்சு வாங்கும்.
ஏதோ எல்லாமே சரியாக நடக்காதது போல் இருப்பர். வயிற்று பிரட்டல், வாந்தி அடிக்கடி இருக்கும். உடல் வலி இருந்து கொண்டே இருக்கும்.
இத்தகு பிரச்சினைகளிலிருந்து அவசியம் வெளிவர வேண்டும். முதலில் இவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கின்றதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சையினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி சதைகளை வலுவாக்கும். எலும்புகளை உறுதியாக்கும். இவை தெரிந்ததே. உடற்பயிற்சியின் பொழுது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராகுவதால் பல நன்மைகள் ஏற்படுவதாக இப்பொழுது கூறப்படுகின்றது.
உறுதியாக கூற மேலும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதால் அதனை இங்கு விவரித்துக் கூறவில்லை.
அவ்வப்போது ‘உண்ணா விரதம்’ இருப்பதால் மூளையிலுள்ள திசுக்களில் சேரும் நச்சுக்கள் சுத்தமடைவதாகவும் கூறப்படுகின்றது.
யோகாவும், தியானமும் ‘பதட்டம்’ குறைய மிகச் சிறந்த வழிகளாகும்.
உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள் தூக்கமின்மை, நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் குறைபாடுடைய திட்ட உணவு போன்ற சில விஷயங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தக்கூடும்..அதற்கு பதிலாக, நீங்கள் உங்களை கவனித்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை
ஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள் கோடைகாலத்தில் தாராளமாக கிடைக்கும் பாகற்காயின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பாகற்காயின் கசப்பு தன்மைக்காகவே இதனை பயன்படுத்த தயங்குவோர் ஏராளம். ஆனால் இதன் இலை, காய், பழம், வேர் என அனைத்துமே மிகுந்த மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. பல்வேறு நோய்களை போக்கும் நோய்
குழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள் பொதுவாக பாதாம் எல்லோருக்கும் மிகவும் நல்லது. அதிக நார்சத்து, இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல முக்கிய மினரல்களை கொண்டுள்ளது. குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. விட்டமின் ஏ, பி நிறைந்தது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான 33% கால்சியம் கொண்டுள்ளது.பாதாமை அப்படியே
உடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் | weight loss cabbage diet முட்டைகோஸ் ஒரு கீரை வகையை சேர்ந்த உணவாகும் இதில் பல வகைகள் பல இடங்களில் இருந்தாலும் இதனுடைய முன்னோர் பிறப்பிடம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பா நாடுகளாகும் முட்டைகோஸை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறப்பானது இதை எந்த அளவுக்கு அடுப்பில்