மினி உலக கோப்பை தொடர் இன்று தொடக்கம்

மினி உலக கோப்பை தொடர் இன்று தொடக்கம்
7-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. வருகிற 23-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டி நடத்தும் இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளும் இடம் பெற்று உள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. டோனி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

பயிற்சி ஆட்டத்தில் இலங்கை, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய அணி உள்ளது. அரை இறுதியில் நுழைய வேண்டுமானால் இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டும். இதனால் நெருக்கடியை தவிர்க்க இன்றைய ஆட்டத்தில் வெல்வது அவசியமாகிறது.

ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடியதால் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் பிடித்தார். இரண்டு பயிற்சி ஆட்டத்திலும் சதம் அடித்தார். மிகவும் நல்ல நிலையில் இருக்கும் அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக ஆடுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6-வது வீரராக களம் இறங்கும் அவரை முன்வரிசையில் டோனி களம் இறங்க திட்டமிட்டு உள்ளார். பந்து வீச்சில் உமேஷ் யாதவும் நல்ல நிலையில் உள்ளார். இதனால் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீரர் ஸ்டெயின் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் ஆடுவது கேள்விகுறியே. அவர் விளையாடாமல் போனால் அது தென்ஆப்பிரிக்காவுக்கு பாதகமே. கேப்டன் டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா, டுமினி, பெலிசிஸ், டேவிட் மில்லர் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

ஐ.பி.எல். போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் நடைபெற்றதை தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வீரர்களை ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு கண்காணிக்கிறது.
https://goo.gl/oxF9TY


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்