மின்சாரம் தாக்கி மேடையிலேயே உயிரிழந்த பிரபல பாடகி

மின்சாரம் தாக்கி மேடையிலேயே உயிரிழந்த பிரபல பாடகி
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல பாடகி மின்சாரம் தாக்கி மேடையிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பார்பரா வெல்டன்ஸ் (35) பிரபல் பாடகர்.. வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாடல்களை பாடி உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்து பல விருதுகளையும் வென்றுள்ளார்.


இந்நிலையில், மேற்கு பிரான்ஸில் உள்ள கவுர்டன்  என்ற  நகரில் கடந்த புதன் கிழமை அன்று இசை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்பரா மேடையில் நின்று உணர்ச்சிகரமாக பாடியுள்ளார். அப்போது, காலநிலை மோசமாக இருந்ததாகவும், இடி மின்னல் அடித்ததாகவும் கூறப்படுகிறது.


மேடையில் பார்பரா பாடிக்கொண்டு இருந்தபோது திடீரென அவரது உடல் தூக்கிப்போட்டது போல் கீழே விழுந்துள்ளார்.


சுற்றி நின்றவர்கள் பார்பராவை மீட்டு முதல் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், அசம்பாவிதம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பில் அவர் மேடையிலேயே உயிரை விட்டுள்ளார்.


மேடையில் பார்பராவை மின்சாரம் தாக்கியதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


பார்பராவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://goo.gl/eyTwUb


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே