tamilkurinji logo
 

மின்விசிறியால் தாத்தாவை அடித்துக் கொலை செய்த பேரன்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news



செய்திகள் >>> தமிழகம்

மின்விசிறியால் தாத்தாவை அடித்துக் கொலை செய்த பேரன்

First Published : Monday , 6th November 2017 07:59:00 PM
Last Updated : Monday , 6th November 2017 07:59:00 PM


மின்விசிறியால் தாத்தாவை அடித்துக் கொலை செய்த பேரன்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

திருப்பூர் அனுப்பர் பாளையம் பாண்டியன் நகர் நேரு வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 80). இவர் தனது மகன் பாலகிருஷ்ணனுடன் வசித்து வந்தார்.


முதியவர் பொன்னுசாமிக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமை தோறும் பணம் கொடுத்து அளவோடு குடித்து விட்டு பத்திரமாக வீட்டுக்கு திரும்புமாறு குடும்பத்தினர் கூறி வந்தனர்.


அதன்படி நேற்று மாலை ரூ.300 பணம் கொடுத்து மதுக்குடிக்க அனுப்பினர். மதுக்கடைக்கு சென்ற முதியவர் அங்கு மதுவாங்கி குடித்தார்.


மதுக்குடித்த பின்னர் போதை தலைக்கேறியது. நள்ளிரவு 12 மணிக்கு போதையுடன் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். இதனையடுத்து அவரது மருமகள் தேவி கதவை திறந்தார்.

தனக்கு பசிக்கிறது சாப்பாடு போடு என்று கூறினார். மருமகள் முதியவருக்கு சாப்பாடு பரிமாறினார். ஒருவாய் சாப்பிட்டதும் குழம்பு சரியில்லை. என்ன குழம்பு வைத்தாய்? என்று தகராறு செய்தார். மருமகள் அவரை சமாதானம் செய்தார். இருந்தாலும் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு படுத்திருந்த தேவியின் மகன் மோகன்ராஜ் (25) எழுந்து நாங்களும் இதைத்தான் சாப்பிட்டோம்.


நான்றாகத்தான் இருந்தது. ஏன் இந்த வயதில் நடுராத்திரியில் சத்தம்போடுகிறீர்கள்? பேசாமல் சாப்பிட்டுவிட்டு படுங்கள் தாத்தா என்று கூறினார். சமாதானம் அடையாத தாத்தா பேரனிடமும் தகராறு செய்தார். மோகன்ராஜ் அமைதியானார்.

இதைத்தொடர்ந்து சாப்பாடு, குழம்பு சரியில்லை என்று தொடர்ந்து மருமகள் தேவியிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டார்.


இதில் ஆத்திரமடைந்த பேரன் அருகில் இருந்த மின்விசிறியை (டேபிள் பேன்) எடுத்து தாத்தாவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த பொன்னுசாமி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலையான முதியவர் பொன்னுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பேரன் மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்விசிறியால் தாத்தாவை அடித்துக் கொலை செய்த பேரன்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
மின்விசிறியால் தாத்தாவை அடித்துக் கொலை செய்த பேரன்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
மின்விசிறியால் தாத்தாவை அடித்துக் கொலை செய்த பேரன்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நிர்மலா தேவி விவகாரம்; பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும்: நடிகை குஷ்பு
பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46)

மேலும்...

 பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து டி.ஜி.பி உத்தரவு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட அரசு நிதி உதவி பெறும் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலாதேவி (வயது46). இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு

மேலும்...

 ரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - நடிகர் பாரதிராஜா
காவிரி மேலாண்மை அமைக்க கோரி பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டு பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த், ‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை

மேலும்...

 அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை
விருதுநகரில் தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவதாக வெளியான ஆடியோ பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று 4 மாணவிகளை பேராசிரியை கட்டாயப் படுத்தும் பேச்சு ‘வாட்ஸ்-

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in