மிரட்டிய பின்னி,சுருண்ட வங்கதேசம் : தொடரை வென்றது இந்தியா

மிரட்டிய பின்னி,சுருண்ட வங்கதேசம் : தொடரை வென்றது இந்தியா
பந்துவீச்சில்  மிரட்டிய‌ ஸ்டூவர்ட் பின்னி 6 விக்கெட் வீழ்த்த, இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2–0 என வென்றது.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது.

இரண்டாவது போட்டி நேற்று மிர்புரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரகிம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். வங்கதேச அணியில் டஸ்கின் அகமது, மிதுன் அறிமுக வாய்ப்பு பெற்றனர்.

இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. ரகானே டக்–அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். மழை பெய்ததால், 5.2 ஓவரில் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின் மீண்டும் போட்டி துவங்கியபோது, 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதன் பின் பந்துவீச வந்த டஸ்கின் ‘வேகத்தில்’ மிரட்டினார்.

இவரிடம் உத்தப்பா (14), ராயுடு (1), புஜாரா (11) என அடுத்தடுத்து சிக்கினர். சகா(4), மொர்டசா பந்தில் அவுட்டானார். ஓரளவுக்கு விளையாடிய கேப்டன் ரெய்னா (27) ரன் அவுட்டாக, கதை முடிந்தது. மீண்டும் பந்தை கையில் எடுத்த டஸ்கின் இம்முறை பின்னி (3), அமித் மிஸ்ராவை (4)வெளியேற்றி திருப்தி அடைந்தார்.

இந்திய அணி 25.3 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது.  வங்கதேச அணி சார்பில் டஸ்கின் அகமது 5, மொர்டசா 2 விக்கெட் வீழ்த்தினார்.

எளிய இலக்கை துரத்திய வங்கதேச அணியை இந்திய பவுலர்கள் புரட்டி எடுத்தனர். மோகித் சர்மா பந்துவீச்சில் தமிம் இக்பால் (4), அனாமுல் (0)  நடையைக் கட்டினர். முஷ்பிகுர் (11), மிதுனை (26) பின்னி கவனித்து அனுப்பினார். சாகிப்  (4), ஜியார் (0) சத்தமில்லாமல் மோகித்திடம் சரணடைந்தனர்.

கடைசி கட்டத்தில் பின்னி விஸ்வரூபம் எடுத்தார். இவரது பந்துவீச்சில் மொர்டசா (2), அல் அமின் (0), நாசிர் (5) அவுட்டாக, வங்கதேச அணி 17.4 ஓவரில் 58 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி, 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் பின்னி 6, மோகித் 4 விக்கெட் வீழ்த்தினர்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2–0 என கைப்பற்றியது.

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், நேற்று இந்திய அணி தனது குறைந்தபட்ச (105) ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன், 2007 உலக கோப்பை போட்டியில் (போர்ட் ஆப் ஸ்பெயின்) 191 ரன்னுக்கு சுருண்டு இருந்தது.

நேற்று 58 ரன்னுக்கு சுருண்ட வங்கதேச அணி, இந்தியாவுக்கு எதிராக, தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன், 2003ல் 76 ரன்னுக்கு சுருண்டு இருந்தது.

* கடந்த 2011, மார்ச் மாதம் இதே மிர்புர் மைதானத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 58 ரன்னுக்கு சுருண்ட வங்கதேச அணி, நேற்று மீண்டும் இதே ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இது தான் வங்கதேச அணியின் குறைந்த பட்ச ஸ்கோர்.

நேற்று 4 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்த ஸ்டூவர்ட் பின்னி, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

தவிர, இந்திய அளவில் முதலிடத்தில் இருந்த கும்ளேயின் (12 ரன்னுக்கு, 6 விக்., எதிர்–வெ.இண்டீஸ், 1993) சாதனையும் தகர்ந்தது.

* உலகளவில் இலங்கையின் சமிந்தா வாஸ் (19/8 விக்.,), அப்ரிதி (பாக்.,–12/7), மெக்ராத் (ஆஸி.,–15/7), பிக்கெல் (ஆஸி.,–20/7), முரளிதரன் (இலங்கை–30/7), வக்கார் யூனிஸ் (பாக்.,–36/7), அக்குய்ப் ஜாவேத் (பாக்.,–37/7), டேவிஸ் (வெ.இண்டீஸ்–51/7) ஆகியோருக்கு அடுத்து, பின்னி சிறந்த பவுலிங்கை (4 ரன்/6 விக்.,) பதிவு செய்த, 8வது வீரர் ஆனார்.

கடந்த 1983ல் இந்திய அணி உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றவர் ‘ஆல்–ரவுண்டர்’ ரோஜர் பின்னி. இவரது மகன் தான் ஸ்டூவர்ட் பின்னி, 30. கர்நாடகாவைச் சேர்ந்த இவர், சமீபத்தில் தான் இந்திய அணியில் இடம் பெற்றார்.
https://goo.gl/f79SiL


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்