tamilkurinji logo


 

மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு,ATMs run out of cash in many states, Arun Jaitley says problem temporary tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

ATMs,run,out,of,cash,in,many,states,,Arun,Jaitley,says,problem,temporary tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு

First Published : Tuesday , 17th April 2018 08:04:30 PM
Last Updated : Tuesday , 17th April 2018 08:04:30 PM


மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு,ATMs run out of cash in many states, Arun Jaitley says problem temporary
tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

நாட்டில் உள்ள பணப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், 500 ரூபாய் அச்சடிப்பது குறித்து மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.

மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. அதன்பின் புதிய ரூ.2000, ரூ.200, ரூ.500 நோட்டுகள் அச்சடித்து ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடப்பட்டபின் பணப்பழக்கம் சீரடைந்தது.

இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம், பிஹார், தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே பணப்புழக்கம் குறைந்து வந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள பல நகரங்களில் உள்ள ஏடிஎம்களில் பணம் இல்லாமல் காலியாகக் கிடக்கின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, திடீரென, வழக்குத்துக்கு மாறான வகையில் பணத்தின் தேவை அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் போதுமான அளவு கரன்சி இருப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இந்த திடீர் பணப்பற்றாக்குறையை சில நாட்களில் சரியாகும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் எஸ்.சி.கார்க் டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறுகையில், 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் அளவை அதிகப்படுத்த இருக்கிறோம். இப்போது நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் நோட்டுகள் ரூ.500 கோடி அச்சடிக்கிறோம். இதை அதிகப்படுத்தி, நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் நோட்டுகளைஅச்சடிக்கும் அளவை 5 மடங்கு உயர்த்தப் போகிறோம். அடுத்த இருநாட்களில் ரூ.2,500 கோடி வங்கிகளுக்கு அனுப்ப இருக்கிறோம். இந்த மாதத்துக்குள் ரூ.70 ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடி வரையிலான 500 ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி, ஏப்ரல் 6-ம் தேதி வரை நாட்டில் பணப்புழக்கம் ரூ.18.17 லட்சம் கோடியாக இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ஏறக்குறைய ரூ.5 லட்சம் கோடிக்கு ரூ.20 ஆயிரம் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு,ATMs run out of cash in many states, Arun Jaitley says problem temporary
tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு,ATMs run out of cash in many states, Arun Jaitley says problem temporary
tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு,ATMs run out of cash in many states, Arun Jaitley says problem temporary
tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி

மேலும்...

 ஜிவாதான் என் மனஅழுத்தத்தைப் போக்குபவள்: தோனி உருக்கம்
என் மகள் ஜிவாதான் என் மனஅழுத்தத்தை போக்கும் மருந்து, மூன்றரை வயதிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்று மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்தோனியின் மூன்றரை வயது மகள் ஜிவா. சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in