மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த் ,Actor Rajinikanth meets fans in Chennai | tamil news india news
tamil seithigal india seithigal tamil cinema news
First Published : Thursday , 14th December 2017 07:32:14 PM Last Updated : Thursday , 14th December 2017 07:32:14 PM
கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் சந்திக்கும் நாட்களை வெளியிட்டிருக்கிறார்.
கடந்த மே மாதம் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து சந்தித்தார் ரஜினிகாந்த். மேலும் அவர்கள் மத்தியில் அரசியல் குறித்து பேசினார்.
“சில அரசியல்வாதிகள் எனது பெயரை பயன்படுத்தி ஆதாயம் பெற்றனர். எனது ரசிகர்களையும் அவர்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கொண்டனர். அமைச்சராக ஆசைப்படலாம். ஆனால் பணம் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது. நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன். நாட்டில் சிஸ்டம் கெட்டுக்கிடக்கிறது. போருக்கு தயாராக இருங்கள்” என்றெல்லாம் பேசி அரசியல் எண்ணங்களை வெளிப்படுத்தினார்.
ரஜினிகாந்தின் பேச்சு அரசியலுக்கு வருவதை பிரதிபலிப்பதாக இருந்தது என்று கணிப்புகள் வந்தன. இதைத்தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வந்தனர். அதன்பிறகு 2.0, காலா படங்களில் அவர் பிஸியாகி விட்டார். தற்போது அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன.
அடுத்து புதிய படத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அரசியலுக்கு வருதற்காகவே படங்களில் நடிப்பதை அவர் நிறுத்தி இருக்கலாம் என்ற பேச்சு நிலவுகிறது. இந்நிலையில், மீண்டும் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.
வரும் டிசம்பர் 26ம் தேதியில் இருந்து, டிசம்பர் 31ம் தேதி வரை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்க இருக்கிறார். ஒரு நாளைக்கு 1000 பேர் வீதம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் அரசியல் குறித்து பேசுவார் என்றும், சந்திப்பு முடிந்ததும் அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ் நடிகர் பிரகாஷ்ராஜ் காவிரி விவகாரம் தொடர்பாக அரசியல்வாதிகளை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பல
பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறி இருப்பதாவது:-30 ஆண்டுகளுக்கு முன்பே நான் எனது அரசியல் பயணத்தை தொடங்கி விட்டேன். எனது ரசிகர்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய போதே எனது அரசியல் பயணம் தொடங்கி விட்டது.எனது ரசிகர் மன்றத்தை நான்
பாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து நடிகை திடீர் அரை நிர்வாண போராட்டம் தெலுங்கு நடிகைகளுக்கு எதிராக தெலுங்கு திரையுலகில் நடைப்பெற்று வரும் துஷ்பிரயோகங்களை குறித்து அப்படமாக வெளிக்கொண்டு வந்த ஸ்ரீ ரெட்டி இன்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களால் கடந்த வருடம் தமிழ் பட உலகை உலுக்கிய சுசிலீக்ஸ்