முடிவுக்கு வந்தது ஜாம்பவானின் கிரிக்கெட் வாழ்க்கை

முடிவுக்கு வந்தது ஜாம்பவானின் கிரிக்கெட் வாழ்க்கை
ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் சச்சின் டெண்டுல்கர் வெளிப்படையாகத் தனது கடைசி ஐபிஎல் போட்டித் தொடர் இதுதான் என்று அறிவித்தார்.

அத்துடன் தனது கிரிக்கெட் வாழ்க்கை இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது என்பதையும் தெரிவித்தார். மேலும் இந்த சீஸன் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் நிறைவுப் பகுதியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும்பாலான மூத்த இந்திய கிரிக்கெட் வீரர்களும் சர்வதேச முதல்தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் நபராக சச்சின் இருப்பார் என்கின்றனர் ரசிகர்கள்.

ஏற்கெனவே சர்வதேச டி20, ஒரு நாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு பெற்று விட்டார் சச்சின். இந்நிலையில் ஐபிஎல்லில் இருந்தும் இந்த வருடம் விடைபெற்று விட்டதால், சச்சின் ரசிகர்கள் இந்த சீஸனே அவரது கிரிக்கெட் சகாப்தத்தின் இறுதிப் பக்கங்களாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

வரும் நவம்பர் தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன. தொடர்ந்து நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளும் உள்ளன.

இந்நிலையில், சச்சின் தனது 200 வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதாக பெருமை கொள்கின்றனர் சச்சின் ரசிகர்கள்.
https://goo.gl/RW7hcs


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்