tamilkurinji logo


 

முத்தலாக் சொல்லி பெண்களை விவாகரத்து செய்வதற்கு இடைக்காலத்தடை : உச்சநீமன்றம்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்




செய்திகள் >>> இந்தியா

முத்தலாக் சொல்லி பெண்களை விவாகரத்து செய்வதற்கு இடைக்காலத்தடை : உச்சநீமன்றம்

First Published : Tuesday , 22nd August 2017 01:06:42 PM
Last Updated : Tuesday , 22nd August 2017 01:06:42 PM


முத்தலாக் சொல்லி பெண்களை விவாகரத்து செய்வதற்கு இடைக்காலத்தடை : உச்சநீமன்றம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

முஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்ட அங்கீகாரமற்றது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. முத்தலாக் முறை தொடர்பாக மத்திய அரசு 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.


முத்தலாக் வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹார், அப்துல் நசீர் ஆகியோர் முத்தலாக் முறைக்கு 6 மாத காலம் தடை விதிக்க வேண்டும்; 6 மாதங்களுக்குள் மத்திய அரசு முத்தலாக் ஒழுங்குமுறை சட்டத்தை இயற்ற வேண்டும் எனக் கூறினர்.

நீதிபதிகள் குரியன் ஜோசப், நாரிமன், யு.யு.லலித் ஆகியோர் முத்தலாக் முறை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனக் கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து இறுதித் தீர்ப்பை வாசித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார், "அரசியல் சாசன அமர்வில் 5 நீதிபதிகளில் மூவர் முத்தலாக் முறையை சட்ட அங்கீகாரமற்றது எனக் கூறியுள்ளதால் பெரும்பான்மை அடிப்படையில் இந்த நீதிமன்றம் முத்தலாக் முறையை சட்ட விரோதமானது" என அறிவித்தார்.

முஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்டப்படி செல்லத்தக்கதா என்ற வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன், யு.யு.லலித், அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக நடந்துவந்தது.

கடந்த மே 11-ம் தேதி தொடங்கி 6 நாட்கள் விசாரணை நடந்தது. மனுதாரர் ஷாய்ரா பானு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் சத்தா, ‘முத்தலாக் விவாகரத்து நடைமுறை ஒரு பாவச்செயல்’ என்பதை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பல்வேறு பெண் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஆனந்த் குரோவர், சல்மான் குர்ஷித், ஆரிப் முகமது கான், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் முத்தலாக் நடைமுறை சட்ட விரோதம் என்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் வாதிட்டனர்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘மிகவும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய, முத்தலாக் விவாகரத்து நடைமுறையை பயன்படுத்தக் கூடாது என்று முஸ்லிம் ஆண்களிடம் ‘நிக்காநாமா’வின்போது அறிவுரை வழங்கும்படி, அனைத்து காஸிக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். முத்தலாக் நடைமுறை சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால் முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறைக்கு புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரத் தயார் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்பு கடந்த மே 18-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. கோடை விடுமுறைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில், தலைமை நீதிபதி கேஹர் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று காலை 10:30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளது.

முத்தலாக் முறையை சட்டவிரோதமாக அறிவித்ததற்கு நாடு முழுவதும் பாராட்டும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது. புதுச்சேரி ஆளுரநர் கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், "முத்தலாக் விவகாரத்தில் சட்டத்துறை என்ன செய்திருக்க வேண்டுமோ அதை உச்ச நீதிமன்றம் தற்போது அறிவுறுத்தியுள்ளது. முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒழிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"முத்தலாக் முறை சட்டவிரோதமானது என மூன்று நீதிபதிகள் அறிவித்திருப்பது மன திருப்தியளிக்கிறது என" பாஜக பிரமுகர் ஷாசியா இல்மி கூறியுள்ளார்.


முத்தலாக் சொல்லி பெண்களை விவாகரத்து செய்வதற்கு இடைக்காலத்தடை : உச்சநீமன்றம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
முத்தலாக் சொல்லி பெண்களை விவாகரத்து செய்வதற்கு இடைக்காலத்தடை : உச்சநீமன்றம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
முத்தலாக் சொல்லி பெண்களை விவாகரத்து செய்வதற்கு இடைக்காலத்தடை : உச்சநீமன்றம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்
ராஜஸ்தான் மாநிலம், பார்மேர் மாவட்டம் சோடான் எனும் இடத்தில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பள்ளி பேருந்து மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று

மேலும்...

 கல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்
மத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து

மேலும்...

 பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண், பால்வளத் துறையில் உற்பத்தி சாத்தியமற்றது: பிரதமர் மோடி
அனைத்துத் துறைகளிலும் அடிமட்ட அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.நரேந்திர மோடி (NaMo) வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுப்  பெண்களுடன் மோடி பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது;-இன்று எந்தத் துறையை

மேலும்...

 மனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்
எம்எல்ஏ தன்னை 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு தனது கணவரே உதவி செய்ததாகவும் போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார். அசாமின் அலகாபூர் தொகுதி எம்எல்ஏ நிஜாம் உத்தின் சவுத்ரி. இவர் மீது கடந்த 6ம் தேதி இளம்பெண் ஒருவர்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in