முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்

முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி அங்குள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களாக வாஜ்பாயின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்பட்டது.இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று மாலை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று வாஜ்பாயை பார்த்தார். அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானியும் ஆஸ்பத்திரிக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை பற்றி விசாரித்தார்.  

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரமாக வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும், அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று இரவு அறிவித்தது. உயிர் காக்கும் உபகரணங்களுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வாஜ்பாய் உடல் நிலை குறித்து நலம் விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பல்வேறு தேசிய தலைவர்கள் இன்று வந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், வாஜ்பாய் உடல் நிலை தொடரந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில்  இன்று மாலை 5,.05 மணிக்கு சிகிச்சைபலனின்றி வாஜ்பாய் காலமானதாக  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.
https://goo.gl/fTREGz






27 Feb 2019

போர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்

27 Feb 2019

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்

26 Feb 2019

இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

26 Feb 2019

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்

26 Feb 2019

எல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை

19 Feb 2019

புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி

19 Feb 2019

தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து

15 Feb 2019

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி

15 Feb 2019

மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

15 Feb 2019

காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்