tamilkurinji logo


 

முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி,




முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி

First Published : Saturday , 17th December 2011 12:20:21 PM
Last Updated : Saturday , 17th December 2011 02:09:43 PM


முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,


அது மட்டுமல்ல ‘ஆற்று வளமில்லாமல் வேற்று வளமில்லை; நதியில்லாமல் நமக்கு நாதியில்லை’ என்பதை உணர்ந்து காவிரி நதியை நச்சு நதியாக்கும் திருச்செங்கோடு வட்டம், பள்ளிபாளையத்தில் இயங்கக் கூடிய சாயப்பட்டறைகளை நூற்றுக்கணக்கில் நான் இழுத்து மூடினேன்.  

நாமக்கல்லில் சட்டத்திற்கு புறம்பாக போலி ஆவணங்கள் தயாரித்து பல காலம் நூற்றுக் கணக்கில் பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்த நபரை கைது செய்ய உத்தரவிட்டவன் நான். இது பற்றிய பத்திரிக்கை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன்.

கலப்படம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தேன். குறிப்பாக தேயிலை தூள் தயாரிப்பில் பெருமளவில் கலப்படம் செய்து விற்பனை செய்தவர்களை கைது செய்து கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தினேன். இது பற்றிய பத்திரிக்கை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன்.

எளிய மக்களின் உயிரோடு விளையாடக் கூடிய போலி மருத்துவர்களைக் கண்டறிந்து 10க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தேன். இது பற்றிய பத்திரிக்கை செய்தியையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன்.

ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளில் ஏழை தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கான உணவுப் பொருள் வழங்கலில் முறைகேடு செய்த 20க்கும் மேற்பட்ட விடுதிப் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தினேன். மலை வாழ்மக்களின் நலனைக்காக்க கொல்லிமலையில் சரியாக பள்ளிக்குச் செல்லாத ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தேன். உழவர் சந்தையில் விவசாயிகள் மட்டுமே இருக்க வேண்டுமென்று வியாபாரிகளை அப்புறப்படுத்தினேன்.  

இது போன்ற சட்டத்தை அமல் படுத்துகின்ற பணி மட்டுமல்ல. பிற முன்னேற்ற, ஆக்கப்பூர்வமான பணிகளையும் நான் மேற்கொண்டேன். அரசு பள்ளிகளிலே எம் இணையற்ற தாய்மொழியாம் தமிழ் வழியிலே படிக்கக் கூடியவர்கள், ஏழை எளிய பிள்ளைகள். இவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்று - அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை புரிய வேண்டுமென்பதற்காக பலமுறை உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டத்தை நடத்தி அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன்.  திட்டங்கள் தீட்டியிருக்கிறேன். அதை நடைமுறைப் படுத்துவதைக் கண்காணித்திருக்கிறேன்.

 அதைப் போல ஆரம்பப் பள்ளிகளில் சரியான அடித்தளம் அமைத்திட வேண்டும் என்பதற்காகவும் - அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை அளிக்க வேண்டுமென்பதற்காகவும் எல்லா ஆசிரியர்களையும் அழைத்து ஊராட்சி ஒன்றியம் தோறும் கூட்டங்கள் நடத்தி ஆசிரியர்களை ஊக்கப்படுத்தினேன், வழிகாட்டினேன். நூற்றுக் கணக்கான பள்ளிகளை நானே தணிக்கை செய்தேன். அரசு பள்ளிகளில் படிக்கக் கூடிய சிறந்த ஏழை எளிய குழந்தைகளுக்கு பரிசுகளும், பாராட்டுக்களும் வழங்கியிருக்கிறேன். என் தாய்திருநாட்டின் ஏழைப் பிள்ளைகளின் கடைசி நம்பிக்கையாம் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த கூட்டங்களை 08-06-2010 , 22-07-2010, 26-07-2010, 02-09-2010-, 03-09-2010 ஆகிய தேதிகளில் நடத்தியிருக்கிறேன்.   

தொடர்ச்சி....


முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி, முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம்  அளித்த புகார் மனு தொடர்ச்சி,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் எளிய கிராமத்து விவசாயிகளிடமும், ஏழைத் தொழிலாளர்களிடமும் கையூட்டு பெற வற்புறுத்துவதை தடுக்க முற்பட்டேன். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெறுக்கத் தகுந்த வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக வெடித்துக் கிளம்பிய கருப்புரோஜா மார்ட்டின் லூதர்கிங் குறிப்பிடுவார் "இந்த உலகத்தில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
இது சம்பந்தமாக என்னையும் அடிக்கடி தொலைபேசியில் பேசி இழப்பீட்டு தொகையை அதிகரித்துக் கொடுக்கச் சொல்லி நச்சரித்து வந்தார் இவர். இதைப்பற்றி விசாரித்த பொழுது இந்த விவசாயிகளிடத்தில் அதிகமான இழப்பீட்டை பெற்று தருகிறேன் என்று சொல்லி இவர் கனிசமான அளவில் நிதி ஆதாயம்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
திருச்செங்கோடு வட்டம், வையப்பமலை என்கின்ற இடத்தில் கல் குவாரி அடிப்பதற்கு தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  அங்கே ஒவ்வொரு நடைக்கும் அரசுக்கு இவர்கள் பணம் கட்ட வேண்டும். ஆனால் கூடுதலாக கல் எடுத்து விட்டு குறைவாக பணம் கட்டியிருக்கிறார்கள் என்கின்ற புகாரின் அடிப்படையில்

மேலும்...

 முன்னாள் முதல்வருக்கு கலெக்டர் சகாயம் அளித்த புகார் மனு தொடர்ச்சி
சாதி மதங்களைக் கடந்து மக்களை உளமாற நேசிப்பவன் நான். மக்களை நேசிப்பது என்பது அவர்களின் மரபுகளையும், மத உணர்வுகளையும் மதிக்கின்ற பொழுதுதான் முழுமை பெறுகிறது என்பதை உளமாற உணர்ந்தவன் நான். நான் நாமக்கல் மாவட்ட மக்களை மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டு உளமாற

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in